பிட்ஸ் 2: ரயிலைக் காணோமாம்!
ரயிலைக் காணோம்!
இந்தியா ஸ்பெஷல்
என்றே சில விஷயங்கள் நடக்கும். அதில் முக்கியமானது திருட்டு.. பல்பு, சேர், கம்ப்யூட்டர்,
நகைகள், பணம் என நூதன நுட்பமாக திருடி ஆச்சரியப்பட
வைப்பார்கள். ஆனால் அண்மையில்
நடந்த திருட்டை நினைத்து கோபப்படுவதா, திருடர்களின் புத்திசாலித்தனத்தை
மெச்சுவதா என்றே புரியவில்லை.
ஜார்க்கண்டிலுள்ள
ரான்ஞ்சி ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு. அங்கு நின்றிருந்த பிரிமீயம் எக்ஸ்பிரஸ்
ரயில்களான ராஜ்தானி மற்றும் சம்பர்க் என இரண்டு ரயில்களின் கோச் பெட்டிகளில் சிலவற்றை
காணோம் என்பதுதான் காரணம். எங்கு போனது எப்படிபோனது என நிலைய
மேலாளர் மாதா, பிதாவை மனதில் வேண்டி கூகுளில் தேடியும் கோச் பெட்டிகளை
கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் கொள்ளை குழுக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம்
என புகாரைப் பெற்ற போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே கோச்களுக்கு
காட்டும் அக்கறை ஆசம்!
டெஸ்ட் ட்யூப்
பேபி சீதா!
நவீன இந்தியாவை
முன்னேற்ற புராணகாலத்து நாயகர்கள் வந்துவிட்டார்களோ என மக்கள் மிரளுமளவு பாஜக அமைச்சர்கள்
பேச்சில் பொளந்து கட்டுகிறார்கள்.
அண்மையில் உத்தரப்பிரதேச
துணை முதல்வர் தினேஷ் சர்மா அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் தன் உரையில் தொழில்நுட்பம்
பற்றிய எடுத்துக்காட்டுக்கு பிளாஷ்பேக்கில் புராணகாலத்திற்கு சென்றார். மகாபாரதம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட முதல் நிகழ்ச்சி, நாரதர் முதல் பத்திரிகையாளர் என பேசி மிரளவைத்தார். அதோடு
ராமாயண காலத்தில் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் உண்டு என்றவர் அதற்கு சீதாவை உதாரணமாக இழுத்துவிட்டார்.
"மண்பானையில் கிடைத்ததாக சீதாவை கூறுகிறார்களே, அந்த கான்செப்ட்தானே டெஸ்ட் ட்யூப் குழந்தை" என
பேசிய வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் மீம்ஸ்களால் வறுக்கப்பட்டு வைரலாகிவருகிறது.
பிஸினஸ் திருட்டு!
ஆடி காரை விற்க
மனசு வராதுதான்.
ஆனால் கஸ்டமரிடம் விற்றபிறகு அதனை திருடினால் நியாயமா?
உத்தர்காண்டில்
பதுங்கியிருந்த மனோஜ் சிங்காலிடம் போலீஸ் சட்டைக்காலரைப் பிடித்து இதே கேள்வியைத்தான்
கேட்டது.
டெல்லியின் பொறியாளராக வேலை பார்த்த மனோஜ் சிங்கால், அண்மையில் டிராவல்ஸ் வைத்திருந்த சர்ஃபராசுதீனிடம் தன் ஆடி காரை பதினேழு லட்சம்
ரூபாய்க்கு விற்றிருக்கிறார்.
முதல் தவணையாக 50 ஆயிரமும், பின்னர் இணையவழியாக 14 லட்சத்தை மனோஜூக்கு அனுப்பியுள்ளார் சர்ஃபராசுதீன். மீதி
3 லட்சம் கொடுத்தால் காரின் ஆர்.சிபுக்கில் பெயர்
மாற்றும் நிலையில் சர்ஃபராசுதீன், டெல்லியிலுள்ள வனவிலங்கு பூங்கா அருகே நிறுத்திவிட்டு வந்த கார்
மிஸ்ஸிங். உடனே மனோஜூக்கு போன் செய்தால், இனி எனக்கு போன் செய்யாதே என அவர் மிரட்ட சர்ஃபராசுதீன் 100 க்கு போன் செய்தார். டூப்ளிக்கேட் சாவி மூலம் விற்ற ஆடிக்காரை
திருடிய மனோஜ் தன் சொந்த ஊரான காசிப்பூரில் பதுங்கியுள்ளது அறிந்த போலீஸ் அவரை வளைத்துப்
பிடித்துள்ளது