நம்பிக்கையின் பின்னே!- பாலஸ்தீன அவலம்
நம்பிக்கையின் பின்னே!
இஸ்ரேலின் ஜெருசலேமில் அமெரிக்க அரசு புதிய தூதரகத்தை மே
14 அன்று இவாங்கா ட்ரம்ப் திறந்து வைத்தபோது,
காசா எல்லையில் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலில் அறுபது பாலஸ்தீனியர்கள் பலியாயினர்.
இஸ்ரேல் எகிப்துக்கும் இடையிலுள்ள மத்தியதரைக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் அகதியாக தங்கியுள்ளனர். இவர்களின் சொந்த நிலம் இன்று யூதர்களின் கையில் அகப்பட்டு இஸ்ரேலாக மாறியுள்ளது. காசாவில் தினசரி மின்சாரம்
4-6 மணிநேரமும், குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மையின் அளவு 60%.
காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் தீவிரவாத அமைப்பு பட்டியலில் உள்ள அமைப்பு.
இரானின் நிதியுதவியில் இஸ்ரேலை தீவிரமாக எதிர்க்கிறது ஹமாஸ். "நாங்கள் கௌரவமாக வாழவேண்டும் அல்லது இறக்கவேண்டும்" என்கிறார் பாலஸ்தீனியரான கசன் வதான். பாலஸ்தீனியர்களின் படுகொலைக்கான ஐநாவின் விசாரணையையும் அமெரிக்கா முடக்கியது,
அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முனைப்புக்கு முட்டுக்கட்டையாகியிருக்கிறது.