மலமள்ளும் எந்திரன்!


Image result for bandicoot robot



மலமள்ளும் எந்திரன்- கேரள இளைஞர்களின் புதுமை கண்டுபிடிப்பு- .அன்பரசு

Related image





கேரளாவைச் சேர்ந்த ஜென்ரோபாடிக்ஸ் இன்னோவேஷன்ஸ் எனும் ஸ்டார்அப் நிறுவனம் மலமள்ளும் ரோபாட்டை உருவாக்கி சாதித்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட இளைஞர்குழுவின் இந்த அற்புத கண்டுபிடிப்பை கேரள அரசு, மாநிலமெங்கும் பயன்படுத்த ஆலோசித்து வருகிறது


Related image



"2015 ஆம் ஆண்டு பாதாள சாக்கடையில் இறங்கிய இருவரைக் காப்பாற்ற முனைந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரும் மூச்சுத்திணறி இறந்துபோன வேதனையை எங்களால் மறக்கவே முடியவில்லை. அதுதான் இக்கண்டுபிடிப்புக்கு தூண்டுதல்" என தீர்க்கமாக பேசுகிறார் நிறுவனத்தின் இயக்குநரான எம்.கே.விமல்கோவிந்த்.

இந்தியாவில் கடந்தாண்டில் மட்டும் இறந்துபோன மலமள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300 பேர். இவ்வாண்டில் இதுவரை மலமள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 9 பேர் இறந்துள்ளனர் என சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. 2013 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த மலமள்ளும் தொழிலாளர்கள் தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளதா என ஐயம் எழுப்புகிறது மேற்கண்ட மரணச்செய்திகள். இந்தியாவிலுள்ள மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதவிகித தொழிலாளர்கள் 60 வயதுக்குள் இறந்துவிடுவதை Vice எனும் இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.  



Related image



2015 ஆம் ஆண்டு கேரளாவில் பாதாளச்சாக்கடையை இரு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய இறங்கினர். ஆனால் நச்சுவாயுவினால் மயக்கமடைந்தவர்களை ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்ற முயல, மூவரும் மரணித்த அவல நிகழ்வே ஜென்ரோபாட்டிக் இன்னோவேஷன் குழுவினருக்கு பண்டிகூட் எனும் எந்திரத்தை கண்டறிய ஊக்கம் தந்திருக்கிறது. தற்போது முதல்கட்ட சோதனையில் தேறியுள்ள பண்டிகூட் எனும் இந்த எந்திரன் பல்வேறு சூழல்களிலும் 360 டிகிரியில் தன் இரும்புக் கரங்களை இயக்கி குப்பைகளை அள்ளும். திடக்கழிவுகளைக் கையாளும் பண்டிகூட், அலுமினிய உடலை எளிதாக ஒருவர் இயக்க முடியும். ஐந்து பணியாளர்களின் வேலையை பண்டிகூட் தனியாக செய்யும் திறன் கொண்டது.  தற்போது கார்ப்பரேஷன் தொழிலாளர்களுக்கு இந்த எந்திரத்தை இயக்க கேரள அரசு பயிற்சியளித்து வருகிறது.


Related image

பண்டிகூட் எனும் இந்த எந்திரனுக்கு முன்னர் ஜென்ரோபாட்டிக்ஸ் குழு, பத்து அடி உயரத்தில் நூறு கிலோ எடையைத் தூக்கிச் செல்லும் எந்திரனை வடிவமைத்தது. "ராணுவப்பணிக்கென வடிவமைத்த ரோபாட்டை நீங்கள் பார்க்கும்போது அவதார் எந்திரனைப்போலவே இருக்கும்" என பூரிக்கிறார் இணைநிறுவனரான அருண் ஜார்ஜ். விமல்கோவிந்தின் தந்தை ராணுவ வீரர் என்பதால் பொருட்களை தூக்கிச்சுமந்து செல்லும் கஷ்டங்களை களைய விமல் விரும்பினார். இதுகுறித்து சிங்கப்பூர் மாநாட்டில் சமர்ப்பித்த ஆராய்ச்சிக்கட்டுரையை அமெரிக்க ஆராய்ச்சி சங்கம் சிறந்த கட்டுரையாக அதனை தேர்ந்தெடுத்து பரிசளித்தது.

Related image



இச்செய்தி அறிந்த கேரள ஐடித்துறை அமைச்சர் எம்.சிவசங்கரன் மலமள்ளும் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வுகளை தரமுடியுமா என்று கேட்க, சோதனைமுறையில் பண்டிகூட் எந்திரம் உருவாகியுள்ளது. சோதனையில் வெற்றிபெற்றதைக் கவனித்த கர்நாடக அரசு 50 பண்டிகூட் எந்திரங்களை உருவாக்கித்தர கேட்டுள்ளது. எந்திரங்களை தயாரிக்க தொழிற்சாலை நிறுவும் முயற்சியில் ஜென்இன்னோவேஷன் குழு உழைத்து வருகிறது. மானுட அவலம் களையப்பட்டால் சரிதான்.  




பிரபலமான இடுகைகள்