ராணுவத்தில் தலைகீழாக தேசியக்கொடி பொறிக்கப்பட்டிருப்பது ஏன்?
தலைகீழாக தேசியக்கொடி!
இந்தியாவில் தேசியக்கொடிக்கு பயபக்தி மரியாதை உண்டு. சூரியன் அஸ்தமனம் ஆகும் முன்பு கழற்றுவது,
உடையாக, கர்ச்சீப்பாக பயன்படுத்த தடையுண்டு. ஆனால் அமெரிக்க கொடியை தைத்து உள்ளாடையாகவும் அணிகிறார்கள். அதிலும் ராணுவத்தில் கொடியை தலைகீழாகவே தைத்து அணிகிறார்கள். ஏன்?
1968 ஆம் ஆண்டு அப்பி ஹாஃப்மன் என்பவர் வாஷிங்டனில் நடந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றார் அமெரிக்க தேசியக்கொடியை தலைகீழாக குத்திக்கொண்டு வந்தவரை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தது.
இன்று ஹாஃப்மனை நினைத்து பார்க்க காரணம்,
தேசியக்கொடியை எரிப்பது, கிழிப்பது அமெரிக்க சட்டப்படி குற்றமாகாது என்பதால்தான். 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி,
தேசியக்கொடியை தரையில் வைப்பதோ,
தலைகீழாக வைக்க கூடாது என்று சொன்னதே தவிர அதனை குற்றம் என
கூறவிலை. ராணுவச்சட்டம் 670-1 படி தேசியக்கொடியின் நட்சத்திரங்கள் முன்புறம் இருக்கும்படி வலியுறுத்தியதால், ராணுவ யூனிபார்ம்களில் கொடி வலதுபுறம் வலம் இடமாக பொறிக்கப்பட்டுள்ளது.