வியாழனில் என்ன நடக்கிறது?
வியாழனின் மின்னல்!
வியாழனில் ஏற்படும்
மின்னல் குறித்த ரகசியங்களை நாசா கண்டறிந்துள்ளது. முதன்முதலில் இது குறித்த
தகவலை 1979 ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் கண்டறிந்தது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு பூமியிலும், வியாழனிலும் ஏற்படும்
மின்னல்களில் வேறுபாடு உண்டு என நாசா ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
"மின்னல்
என்பது எந்த கோளில் ஏற்பட்டாலும் அது ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும்" என்கிறார் கலிஃபோர்னியா பசடெனா நாசா ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஷனோன் ப்ரௌன். Microwave
Radiometer Instrument (MWR) எனும் கருவியை இந்த ஆராய்ச்சிக்கு
பயன்படுத்துகிறார்கள்.
இக்கருவி ஜூபிடரிலிருந்து வெளியாகும் அலைகளை பதிவு செய்கிறது.
முதலில் கிடைத்த கிலோஹெர்ட்ஸ் தகவல்களை விட மின்னல் பற்றிய தகவல்கள்
தற்போது மெகாஹெர்ட்ஸில் சேகரிப்பதாக நாசா கூறுகிறது. வாயேஜர்
1&2, காசினி, ஜூனோ(377 முறை) ஆகியவை வாயுக்கோளான வியாழனின் ஏற்படும் மின்னல்களை
பதிவு செய்து வருகிறது. பூமியை விட 25% குறைவான சூரியவெப்பத்தை வியாழன் பெறுகிறது. ஜூலை மாதம்
ஜூனோ வியாழனை மிக அருகில் சுற்றிவரவிருக்கிறது.