பரிணாம வளர்ச்சியில் மூளை எப்படி உருவானது?
பெரிய மூளைக்கு
காரணம் என்ன?
கடந்த மூன்று மில்லியன்
ஆண்டுகளாக மனிதர்களின் மூளை பெற்றுவந்த பரிணாம வளர்ச்சிக்கு காரணம் NOTCH2NL என்ற மரபணுக்களே காரணம்
என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணமான ஸ்டெம்செல்கள்
மூளைப் புறணிப்பகுதியில் அமைந்துள்ளன. "மூளையிலுள்ள எந்த
ஜீன்கள் நம்மை உருவாக்கின என்பதை அறிவதைவிட ஆச்சரியமான விஷயம் இன்று ஏதுமில்லை"
என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான டேவிட் ஹாஸ்லர்.
மேற்சொன்ன மரபணுக்கள்
கொரில்லா,
சிம்பன்சியில் காணப்பட்டாலும் குட்டைவால் குரங்குகளிடம் காணப்படவில்லை.
நியான்டர்தால் காலங்களில் இம்மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இக்காலகட்டங்களில் மட்டும் மனிதர்களின் மூளையில் மாற்றம் தந்த
35 மரபணுக்களைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
NOTCH2NL's என்னும் மரபணு இன்றைய மனிதர்களின் மூளை அளவுக்கு ஆதாரம்.
மரபணுக்களை நகல் எடுக்கும் iq21.1 எனுமிடத்தில்
பாதிப்பு ஏற்படும்போது ஆட்டிசம் உள்ளிட்ட மூளை குறைபாட்டு நோய்கள் ஏற்படுகின்றன என
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.