எவர்ரா வாடு வேசெய்ன்றா ரே!


Image result for sorry



சூயிங்கம்மில் ஷூ ரெடி!


பிளாஸ்டிக் கழிவுகளில் முக்கியமானது சூயிங்கம். பொழுதுபோகாமல் இருக்கும் சமயங்களில் மக்கள் சூயிங்கம்மை சுவைத்து சுவர்களின் ஒட்டிவைப்பது, குப்பைகளில் எறிவது என்பதே இன்று பல லட்சம் டன்களாக எகிறியுள்ளது. இதனை தீர்க்க லண்டன் மற்றும் நெதர்லாந்து நிறுவனம் கூட்டுசேர்ந்து சூயிங்கம்மை ரீசைக்கிள் செய்து ஷூக்களை தயாரித்துள்ளன.

 Gumshoe எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்களில் மறுசுழற்சி செய்த சூயிங்கம்களின் அளவு 20%. ஒரு கிலோ சூயிங்கம்மில் நான்கு ஜோடி ஷூக்கள் தயாரிக்கலாம். சூயிங்கம்மின் ஃப்ளேவரில் ரெடியாகும் ஷூவில் ரப்பர், தோல் கலப்பு உண்டு. இவை மட்டுமில்லாமல் சூயிங்கம் மூலம் பென்சில், ஸ்கேல், ரப்பர்பந்து தயாரிக்கும் ஐடியாவும் இக்கம்பெனிகளுக்கு உண்டாம். அப்போ மக்கள் நிறைய சூயிங்கம் மெல்லணுமே?


பாம்பின் வயிற்றில் ஆன்ட்டி


இந்தோனேஷியாவைச் சேர்ந்த முனா தீவில் ஆன்ட்டி ஒருவர் தோட்டத்திற்கு சென்றார். வெகுநேரமாகியும் ஆளைக்காணோமே என குடும்பமே தேடியதில் கிடைத்தது 23 அடி மலைப்பாம்புதான்.

ஊரே திரண்டு பாம்பின் வயிற்றை கிழித்து ஐம்பத்தி நான்கு வயது வாதிபா ஆன்ட்டியின் உடலை மீட்டுள்ளனர். இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மலைப்பாம்புகள் ஆறு மீட்டர் என்ற நீளத்தில் காணப்படுவது சாதாரணம் என்றாலும் தற்போது கிடைத்த பாம்பு அசாதாரண நீளம் கொண்டது. "இறந்த வாதிபாவின் தோட்டத்திலுள்ள பாறைப்பகுதிகளில் சொகுசாக மலைப்பாம்புகள் வசித்துள்ளன. இவை சிறு வீட்டு விலங்குகளை கொன்று தின்னும் என்றாலும் மனிதர்களை கொல்வது அரிதானது" என்கிறது ஹம்கா வட்டார போலீஸ்துறை.


மன்னிப்பு கேட்டு மர்டர்!

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் மன்னிப்பு கேட்டு மர்டர் செய்த நண்பர்களின் சம்பவம் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.

நிஷாந்த் சௌத்ரி, விக்ராந்த், அங்கித் ஆகியோர் இல்லீகல் பஞ்சாயத்துகளை ரெகுலராக செய்து வந்த நண்பர்கள். அசைன்மெண்டுகள் சம்பந்தமாக  சில நாட்களுக்கு முன்பு நிஷாந்துக்கும் விக்ராந்த் மற்றும் அங்கித் ஆகியோருக்கு சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அங்கித் மற்றும் விக்ராந்த் சற்று இறங்கி வந்து நிஷாந்தை நேரில் சந்தித்து சாரி சொல்லி ஒன்று சேர விரும்பினர். நிஷாந்த் இதற்கு சம்மதித்து ஸ்பாட்டுக்கு வர, கடுமையாக அவரை கிண்டல் செய்து விக்ராந்த்-அங்கித் பேச களம் கலவரமானது. இம்முறை தன் நாட்டுத் துப்பாக்கி மூலம் பதில் சொன்னார்  விக்ராந்த். காயம்பட்ட நிஷாந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறக்க, போலீஸ் துப்பாக்கியும் கையுமாக விக்ராந்த்-அங்கித்தை கைது செய்து லாக்கப்பில் தள்ளியுள்ளது.

 பிரேயருக்கு மறுத்ததால் மர்டர்!

மும்பையின் அனடாப் ஹில் பகுதியைச் சேர்ந்த சிறுமி மதநூலை வாசிக்க மறுத்ததால் குடும்பத்தினரே அவரைக் கொன்றுள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

புனிதநூலை வாசித்து பிரார்த்திக்க மறுத்த சிறுமியை மாமா மற்றும் அத்தை உள்ளிட்ட உறவினர்கள் அடித்து கழுத்தை துப்பட்டாவில் இறுக்கி கொன்றுள்ளது என்கொயரில் வெளியாகியுள்ளது. முதலில் பாத்ரூமில் விழுந்து இறந்தார் தனியார் மருத்துவமனையில் ஸ்மார்ட்டாக சான்றிதழ் வாங்கிய உறவினர்களின் குட்டு, காவல்துறையின் அரசு மருத்துவர்கள் செய்த போஸ்ட்மார்ட்டம் சோதனையில் உடைந்தது. கழுத்தில் துப்பட்டா இறுக்கிய தடயம், உடம்பிலிருந்து காயங்களும் குற்றவாளி உறவினர்களை காட்டிக்கொடுத்தது. கொலையில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை உட்பட எட்டுப்பேர்களை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.