மோடியை வாசிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
மோடியை வாசியுங்கள்!
ராஜஸ்தானில் புதிய
உத்தரவு இதுதான்.
ராஜஸ்தான் அரசின் தனிச்செயலாளர் பாஸ்கர் ஏ சவாந்த் உத்தரவின் பேரில்
பிரதமர் மோடியின் உரைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் வாசிப்பது இனி விதிவிலக்கற்ற கட்டாயம்.
அண்மையில் ஐஏஎஸ்
தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், மூன்றுமாத அடிப்படை பயிற்சியில்
தேர்வுபெற்றால் வேலை என்று பிரதமர் அலுவலகம் கறாராக கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து கணப்பொழுதில் ராஜஸ்தான் அரசு, குஜராத்
முதல்வராக இருந்தபோது மோடி ஆற்றிய சொற்பொழிவு உரைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் வாசிக்க கட்டாயப்படுத்தியுள்ளது.
சிறந்த அரசு நிர்வாகம் என்ற கருத்தை மையப்படுத்தி மோடி பேசிய 'Chintan
shivir' என்ற நூலை இனி ராஜஸ்தான் குடிமை அதிகாரிகள் உருப்போடுவது அவசியம்.
2001-2014 ஆம் ஆண்டுவரை குஜராத் முதல்வராக
பணியாற்றிய பிரதமர் மோடி அரசு நிர்வாகம், நேரமேலாண்மை,
முடிவுகள் எடுப்பது குறித்து ஆழ யோசித்து பேசிய பேச்சுக்களின் தொகுப்பான
இந்நூல் விரைவில் குஜராத்திலிருந்து ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.