டிஜிட்டல் தொழிலதிபர்!
நேபாளத்தின் டிஜிட்டல்
தொழிலதிபர்!
பிஸ்வாஸ் தாகல்
இளமையிலேயே தொழில்நுட்ப கிறுக்கு கொண்டவர். வீட்டில் இன்டர்காம் அமைப்பை வழக்குரைஞர்
தந்தைக்கு உருவாக்கி தந்ததே பிஸ்வாஸ்தான்.
பாக்கெட்மணியை மிச்சம் செய்துதான்
எலக்ட்ரிக் பொருட்களை வாங்கி உள்ளார். ரேடியோ மெக்கானிக்காக இருந்தவர்
இன்று டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனத்தைதொடங்கி 40 மில்லியனுக்கு
அதிபதி. தாகலின் நிறுவனத்தில் 6 லட்சம்
பயனர்கள் இணைந்து விமான டிக்கெட் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர். மத்தியவங்கியின் அனுமதியோடு இசேவா நிறுவனம் இன்று 77 மாவட்டத்தில் 3.5 மில்லியன் பரிமாற்றங்களை செய்து சந்தையில்
முதலிடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின்
கொலராடோ பல்கலைக்கழக அப்ளிகேஷன் 2002 ஆம் ஆண்டு மறுக்கப்பட, நேபாளத்தில் மென்பொருள் பொறியியல் படித்தவர் மைக்ரோசாஃப்டின் பொறியியலாளர்
சான்றிதழ் பெற்று என்ஜிஓவில் வேலை செய்தார். வெப் டொமைன்களை விற்கத்தொடங்கியவர்
வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதிலுள்ள தடுமாற்றத்தை நீக்க
2007 ஆம் ஆண்டு இசேவா நிறுவனத்தை தொடங்கினார். பின் மத்தியவங்கி வங்கிகள் டிஜிட்டல் பரிமாற்றத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை
இயற்றியபின் இசேவா நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.