எழுத்தாளர்களின் கதையில் வரும் குழந்தைகளின் பாத்திரங்கள் - கதைகளில் பேசும் குழந்தைகள்
கதைகளில் பேசும் குழந்தைகள் செந்தில் ஜெகன்நாதன் அகரம் ஃபவுண்டேஷன் விலை ரூ.150 ப.136 மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் எழுதியுள்ள கட்டுரை நூல். இந்த நூல், யாதும் என்ற இதழில் வெளிவந்து பிறகு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. தொடராக வருவது, பிறகு அதை நூலாக தொகுப்பது என இரண்டுமே முக்கியமான பணிகள். தொடராக வரும்போது கூறிய தீபாவளி வாழ்த்துகள் கூட நூலில் நீக்கப்படாமல் இருக்கிறது. நூலின் அட்டைப்படமோ, நூலின் உள்பக்க கட்டமைப்போ, புகைப்படங்களோ பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. மிகவும் சுமாராக அலட்சியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்து நூலை உருவாக்கியிருந்தால், நூல் நன்றாக வந்திருக்கும். பெரிய ஆறுதல், எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் எழுத்துகள் மட்டுமே. நூலுக்கு கொடுக்கும் காசை எழுத்துக்கு மட்டுமே நம்பி கொடுக்கலாம். அந்தளவு முக்கியமான எழுத்தாளர்கள் சிறுகதைகளில், குறுநாவல்களில் வரும் குழந்தை பாத்திரங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மொத்தம் 31 எழுத்தாளர்கள். இதில் நான்கு மேற்கத்திய எழுத்தாளர்கள் உண்டு. மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகள் அனைத்துமே சிற...