இடுகைகள்

டோரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் உருவாகும் வறுமை நிலை!

படம்
 பெருகும் வறுமை, பட்டினியால் வாடும் குழந்தைகள்! இந்த நிலை மூன்றாம் உலக நாடுகளில் சகஜம்தான். இந்தியா போன்ற நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு சேரிப்பகுதிகளை, சாக்கடைகளை, மனிதர்கள் மலத்தை பசியில் அள்ளி தின்பதை பார்க்காமல் கடப்பவர்கள் அதிகம். ஆனால் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காலனியாக்கிய ஒரு நாட்டில் பட்டினி, பசி தொடர்ச்சியாக உருவாகி வளர்கிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் சமீபத்திய அதிர்ச்சி.  வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நடைபாதையில் உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசூதியில், குருத்துவாராவில் இலவச உணவுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வங்கிக்கான நன்கொடை, வறுமையில் இருப்பவர்களுக்கான உதவி தரவேண்டி பதாகைகள் நிறைய காணப்படுகின்றன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு, உடை, வீடு ஆகியவற்றோடு குளிருக்கு சமாளிக்க ஹீட்டர் வசதியும் தேவை. இல்லையெனில் உறைந்து இறந்துவிடுவார்கள். ஏஐ காலத்தில் வேலையிழப்பு நேர்ந்துவருகிறது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே உணவ