இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி
நிலைத்த புகழ் இந்தியா அமிஷ் திரிபாதி கட்டுரை நூல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் தமிழில் மிஸ்டிக் ரைட் இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே? அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவ...