இடுகைகள்

சாக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாக்ஸ் நாற்றம் என்ன செய்யும்?

படம்
ஏன்? எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி சாக்ஸ் நாற்றத்தை வெறுக்கிறேன். ஆனால் அதன் வாசத்தை மனம் விரும்புவது போல தோன்றுகிறதே? பொதுவாகவே நாம் வாசனை விரும்பிகள். பாரதி மெஸ்ஸில் பொரியல், கூட்டு, சாம்பாரில் முருங்கை வாசனை என வந்தால்தான் பலரும் இவ்வளவு பசி இருக்கிறதா? என மூக்கைப் பிடிக்க சாப்பிடுகின்றனர். வீட்டில் பருப்பில் நெய்யை ஊற்றி சாப்பிடுவதும் இதற்குத்தான். சாக்ஸ் விஷயம் இதில் மாறுபட்டாலும், அது நம் உடலில் வரும் வியர்வை என்பதால் அதனை நாம் விரும்புவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் பூஞ்சை ஆபத்து உள்ளது என்பதால் வாரத்திற்கு ஒருமுறையேனும் வாஷிங் மெஷினில் மூக்கை மூடிக்கொண்டு போட்டு துவைத்து விடுங்கள். சீனாவில் இதுபோல ஒருவர் நாற்றமடித்த சாக்ஸ்களை வாசனை நுகர்ந்து நுரையீரலில் நோய்த்தொற்று வந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கிறார். எனவே, கவனம் ப்ரோ. படம், தகவல்: பிபிசி