இடுகைகள்

உணவுச்சங்கிலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழமரங்களைத் தேடி பசியில் அலைந்து தவிக்கும் யானைகள்! - ஆப்பிரிக்க சூழல் அவலக் கதை

படம்
  பசியோ பசி! - ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது, காபோன் நாடு. இங்குள்ள லோப் தேசியப்பூங்கா  4,921 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதி, 1946ஆம் ஆண்டு நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்காவிலுள்ள பருவ மழைக்காட்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் வாழ்கின்றன.  காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருவதால், யானையின் முக்கிய உணவான பழங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதனால், வேறுவழியில்லாத யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொள்கின்றன.  உலகளவில், ஆப்பிரிக்காவில், மட்டுமே 70 சதவீத யானைகள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சாவன்னா யானைகளை விட, காபோன் பருவ மழைக்காடுகளில் வாழும் யானைகள் அளவில் சிறியவை. இந்த யானைகளின் எண்ணிக்கையும் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் வேட்டைகளால் குறைந்து வருகிறது. இம்மழைக்காடுகளில் உள்ள பெரும்பாலான மரங்கள், யானைகளின் சாணத்தினால் முளைத்தவைதான். காடுகளிலுள்ள சிலவகை பழங்களை யானைகளை தவிர  பிற விலங்கினங்கள் உண்டு செரிமானம் செய்யமுடியாது. இயற்கையாகவே பழங்கள் அவ்வாறு அமைந்துள்ளன.

பறவைகள் இல்லாத உலகை கற்பனை செய்யவே முடியாது! - ஸ்காட் வி எட்வர்ட்ஸ்

படம்
  நேர்காணல் ஸ்காட் வி எட்வர்ட்ஸ் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பேராசிரியர் ஸ்காட், பரிணாம உயிரியல் துறையில் பணியாற்றுகிறார். பரிணாம வளர்ச்சியில் பறவைகளின் இயல்பு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பல்லுயிர்த்தன்மையில் பறவைகள் எந்தளவு முக்கியமானவை? அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் தான் வளர்ந்தேன். பத்து வயதிலிருந்தே, அங்குள்ள நிறைய மரங்கள், அதில் வாழ்ந்து வந்த பறவைகள் மீது ஈடுபாடு உருவானது. 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்வதும் எளிது. பிற விலங்கினங்களை விட பறவைகளின் சூழலியல் மற்றும் அதன் வாழ்க்கை இயல்புகளை அறிவது எளிது.  காலநிலை மாற்றத்தை பறவைகள் எப்படி சமாளிக்கின்றன? தற்போது, பறவைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழிட இழப்பு. மனிதர்கள் காடுகளை பெருமளவில் அழித்துவிட்டதால், பறவைகள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இந்தியாவின் அரணாக உள்ள இமாலயத்தில், சில தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அவற்றின் வாழிடமும் சுருங்கினால், அவையும் அழிந்துவிடும். வேட்டையாடல், பறவைகளை செல்லப்பறவைகளாக வளர்

தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே

படம்
  மதுஸ்ரீ முட்கே தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர்  மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார்.  இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப்  பற்றி ஆராய்ந்து வருகிறார்.  மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.   மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவ

உணவுச்சங்கிலி, உணவு இணையம் வேறுபாடு என்ன?

படம்
உணவு இணையம் உணவுச்சங்கிலி உணவுச்சங்கிலி, உணவு இணைப்பகம் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? உணவுச்சங்கிலி என்பது தாவரம், மான், புலி என்று அமைந்திருக்கிருக்கும். முதல்நிலை, இரண்டாம் நிலை என்று இதனைக் குறிப்பிடுவார்கள். அதனை அடிப்படை அறிவியல் நூலில் வாசித்திருப்பீர்கள். இப்போது ஆராய்ச்சி நிலையில் இருப்பது, இந்த தாவரம், மான், புலி ஆகியவை எப்படி குறுக்கும் மறுக்குமாக ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன என்பதைத்தான். இதைத்தான் உணவு இணைப்பகம் என்று குறிப்பிடுகின்றனர். எளிமையாக சொன்னால் புல்லை மான் மேய்கிறது என்பது உணவுச்சங்கிலி. ஒரு மரத்தைச் சார்ந்து வாழும் பறவை, புழு, இவற்றைத் தின்னவரும் பறவை ஆகியவற்றைப் பற்றியது உணவு இணைப்பகம். உணவுச்சங்கிலி என்பது ஒருவழிப்பாதை போல. உணவு இணைப்பகம் என்பது பல்வேறு கண்ணிகளால் இணைந்த சிலந்தி வலை போல. ஒரு கண்ணி அறுந்தாலும் அதற்கான பாதிப்புகளை இயற்கையில் பார்க்கலாம். நன்றி: சயின்ஸ்பாப்