இடுகைகள்

எட்ஜீன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித உடல் உறுப்புகளில் கையுறை! மிரட்டிய எட் ஜீன்

படம்
அசுர குலம் எட் ஜீன் 1950களில் எட் ஜீன் பற்றி உலகம் அறிந்தது. இவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சைக்கோ என்ற நாவலை ராபர்ட் பிலோச் என்பவர் எழுதினார். இதைத்தான் ஹிட்சாக் சைக்கோ என்ற பெயரில் படமாக்கினார். ஜீன், தன் இறந்துபோன அம்மாவை அப்படியே பாடம் பண்ணி வைத்திருந்தார். இன்னும் பல பகீர்களை அவரது வீட்டில் போலீசார் பார்த்தாக கூறுகிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம். ஜீனை போலீசார் வளைத்து பிடித்தபோது, அவர் வைத்திருந்த பொருட்களை வித்தியாசமாக பார்த்தனர். அதில் ஓர் வித்தியாசம் தெரிந்தது. கையுறைகள், நாற்காலிகள், விளக்கு மூடிகள் என அனைத்தும் மனிதர்களின் உடல் உறுப்புகளாலேயே செய்தவை. பின்னே கொன்ற மனிதர்களை புதைத்தால்தானே நாய்களை வைத்து கண்டுபிடிப்பீர்கள்? இந்த  குணத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஜீனின் இளமைப்பருவ குளறுபடிகள்தான். 1906ஆம்ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்தவர், ஜீன். ஜார்ஜ் - அகஸ்டா என்ற இவரது தந்தையும் தாயும் எப்படி திருமணம் செய்தார்களோ? எந்த விஷயத்திலும் பொருந்தாத ஜோடி. எப்போதும் ஸ்காட்சும் கையுமாக இருப்பவர் அப்பா என்றா