இடுகைகள்

ஸ்பாகெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருந்துளையால் ஈர்க்கப்படும் மனிதன், பூமியின் அடுத்தபக்கம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி காற்று இல்லாத சூழலில் மனிதரொருவர் பூமியின் குழி ஒன்றில் விழுகிறார். அவர் மறுமுனையை அடைய எவ்வளவு நேரமாகும்? 43 நிமிடங்கள். முதலில் சில பிட்ஸ்களைப் பார்ப்போம். பூமியின் விட்டம் தோராயமாக 12, 470 கிலோமீட்டர்கள். குழியில் விழுபவர் நொடிக்கு 7,900 மீட்டர் வேகத்தில் விழுவார். வேகமாக மறுபக்கம் வந்து விழுந்தால் நல்லது. இல்லையெனில் மீண்டும் கீழே விழுமாறு சூழல் ஏற்படக்கூடும். பூமியின் நடுப்பகுதியில் குழியைத் தோண்டி அதில் குதிப்பது சாதாரண காரியம் கிடையாது. முதல் பிரச்னை குழியின் நூறு மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். அடுத்து அதில் உள்ள அதீத வெப்பத்தை எதிர்கொள்ள பயணிக்கு உதவ வேண்டும். இல்லையெனில் குழியில் இறங்கி பயணிக்கும் பாதி வழியில் பொசுங்கிப் போய்விடுவார். இதுவெல்லாம் இல்லாமல் நிலநடுக்கம், எரிமலை ஆபத்துகளை கடந்து சென்றால் மட்டுமே மறுமுனைக்கு செல்ல முடியும். பூமியின் நடுப்பகுதி என்றில்லை. பூமியின் அடுத்த பக்கத்திற்கு எளிதாக செல்ல ஒருபுறமிருந்து குழி தோண்டுவது என்பது குறுக்குவழி போன்று அமையவேண்டும். அதிலும், ஈர்ப்புவிசை, உராய்வு விசை இல்லாமல் இருந்தால் 43 நி