கருந்துளையால் ஈர்க்கப்படும் மனிதன், பூமியின் அடுத்தபக்கம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

 

 

 

 


 

 

 

அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி
காற்று இல்லாத சூழலில் மனிதரொருவர் பூமியின் குழி ஒன்றில் விழுகிறார். அவர் மறுமுனையை அடைய எவ்வளவு நேரமாகும்?

43 நிமிடங்கள்.

முதலில் சில பிட்ஸ்களைப் பார்ப்போம்.

பூமியின் விட்டம் தோராயமாக 12, 470 கிலோமீட்டர்கள்.

குழியில் விழுபவர் நொடிக்கு 7,900 மீட்டர் வேகத்தில் விழுவார். வேகமாக மறுபக்கம் வந்து விழுந்தால் நல்லது. இல்லையெனில் மீண்டும் கீழே விழுமாறு சூழல் ஏற்படக்கூடும்.

பூமியின் நடுப்பகுதியில் குழியைத் தோண்டி அதில் குதிப்பது சாதாரண காரியம் கிடையாது. முதல் பிரச்னை குழியின் நூறு மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். அடுத்து அதில் உள்ள அதீத வெப்பத்தை எதிர்கொள்ள பயணிக்கு உதவ வேண்டும். இல்லையெனில் குழியில் இறங்கி பயணிக்கும் பாதி வழியில் பொசுங்கிப் போய்விடுவார். இதுவெல்லாம் இல்லாமல் நிலநடுக்கம், எரிமலை ஆபத்துகளை கடந்து சென்றால் மட்டுமே மறுமுனைக்கு செல்ல முடியும்.

பூமியின் நடுப்பகுதி என்றில்லை. பூமியின் அடுத்த பக்கத்திற்கு எளிதாக செல்ல ஒருபுறமிருந்து குழி தோண்டுவது என்பது குறுக்குவழி போன்று அமையவேண்டும். அதிலும், ஈர்ப்புவிசை, உராய்வு விசை இல்லாமல் இருந்தால் 43 நிமிடங்களில் அடுத்த பக்கம் செல்லலாம். இதுவும் கூட தோராயமாக கணக்கிடப்பட்ட பயண நேரம்தான்.

2




ஸ்பாகெட்டிஃபிகேஷன் என்றால் என்ன?

இத்தாலி மக்களால் உண்ணப்படும் பாஸ்தா வகைகளில் ஒன்றே ஸ்பாகெட்டி. இதை நூடுல்சில் இருந்து உருவாகியது என்று கூறுகிறார்கள். இக்கேள்வி, சாப்பாடு பற்றியதல்ல. விண்வெளி பற்றியது. கருந்துளை பற்றிய செய்திகளை நாளிதழ், ரீல்ஸ், ஓடிடி வழியாக அறிந்திருப்பீர்கள். உருக்குலைந்து போன விண்மீன் ஒன்றையே கருந்துளை என்று கூறலாம். இதில் ஈர்ப்புவிசை உண்டு. இதுவே பிற கோள்களை உள்ளே இழுத்து அழித்துவிடக் காரணம். இதன் வழியாக ஒளி கூட மீள முடியாது. இதில் ஒருவர் சிக்கினால் தப்பிக்க வாய்ப்பு குறைவு. கால் கருந்துளையில் மாட்டிக்கொண்டாலே போதும். முதலையின் வாயில் மாட்டியது போல்தான். தப்பிக்கவே முடியாது. அந்த வகையில் ஈர்ப்பு விசை கூட கால்களில் எரிச்சலுடன் கூட வலி பரவும். கால், கைகள், தீவிர ஈர்ப்பு விசைக்கு உட்படும். அப்படியே இந்த நிலைமை நீடித்தால், மனிதரின் கை, கால்கள் நீண்டு பாஸ்தா போன்ற நிலைக்கு சென்றுவிடும். பிறகு மரணம்தான். அதைத்தான் ஸ்பாகெட்டிஃபிகேஷன் என்று கூறுகிறார்கள்.

pinterest

கருத்துகள்