டைம் 100 - மாற்றத்தை உருவாக்கிய மனிதர்களின் வரிசை

 

 

 

 

 

 





 

 நன்மையின் விசை - லெஸ்லி லோக்கோ
lesley lokko

கட்டுமானத்துறையில் சாதித்து வரும் நட்சத்திர அந்தஸ்தை உழைப்பால் அடைந்த ஆப்பிரிக்க பெண். ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கட்டுமானக்கலை படிப்பை படித்தவர். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் கட்டுமானக்கலை சார்ந்த கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் நிர்வாகத்தில் முக்கியமான பொறுப்பு வகித்தவர் லோக்கோவும் கூடத்தான். அதில் தனது பங்களிப்பாக எதிர்காலத்திற்கான ஆய்வகம் என்ற பெயரில் படைப்பொன்றை வைத்திருந்தார். அந்த கண்காட்சியில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, அதே பாரம்பரியம் கொண்ட 89 கலைஞர்களை பங்கெடுக்க வைத்திருந்தார்.

லெஸ்லி லோக்கோ காதல், சாகசம் என்ற வகையில் டஜன் கணக்கிலான நூல்களை எழுதியுள்ள எழுத்தாளரும் கூடத்தான். கடந்த ஜனவரி மாதம், ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்சர் என்ற அமைப்பில் கட்டுமானக்கலை பணிக்காக தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அந்த அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு 1848. இதுவரை கருப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. முதல்முறையாக லெஸ்லி லோக்கோவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அந்த அமைப்பு சற்று தாராள மனப்பான்மை கொண்டுள்ளது என்று கூறுவதா, லெஸ்லி தனது உழைப்பால் விருதை அடைந்துள்ளார், விருதைக் கொடுக்கும் நிர்பந்தத்தை உருவாக்கினார் என்று கருதிக்கொள்வதா?

கட்டுமானத்துறையில் லெஸ்லி நன்மையின் விசை, மாற்றத்தின் விசை என்று கூறலாம். அவரது வருகை புதிய கோணங்களை வேட்கையை உருவாக்கி வருகிறது. அதை நாம் கண்ணார கண்டு வருகிறோம் என்பது உண்மை.

அவா டுவெர்னாய்
டைம் 100

பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வீடு - சாம் செம்பெரிஸ்
sam tsemberis

அமெரிக்கா வளர்ச்சியடைந்த நாடு. ஆனாலும் கூட அங்கு அனைவருக்கும் வீடு என்பது இன்றும் கனவுதான். இன்றும், அங்கு வீடில்லாமல் காரில், தெருக்களில் சாலையோரத்தில் குளிரில் வாடுபவர்களைக் காணலாம். தீவிரமான வறுமை, குடும்ப வன்முறை, மனநல சிக்கல்கள் என பல்வேறு பிரச்னைகளால் வீடற்று மக்கள் திரிந்து வருகிறார்கள். அவர்களுக்கான வீட்டை உருவாக்கித் தர சாம், 1992இல் உருவாக்கிய அமைப்பின் பெயர் பாத்வேஸ்.

இந்த அமைப்பு ஒரு மனிதன் வாழ, அவனது தலைக்கு மேலே கூரை அவசியம் என்று கருதுகிறது. அதன் அடிப்படையில் வீட்டை உருவாக்க சாம் செம்பெரிஸ் முயல்கிறார். வீடு என ஒன்று இருந்தால்தான் அரசின் பல்வேறு சேவைகளை ஒருவர் பெறவே முடியும். எனவே, சாம் விலை குறைந்த பாதுகாப்பான வீடுகளை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகிறார். ஹூஸ்டன் தொடங்கி ஹெல்சின்கி வரையில் ஏராளமான வீடுகளை வீடற்றோருக்கு சாம் உருவாக்கி வழங்கியுள்ளார். வீடற்றவர்களை மனிதநேயமே காக்கும் என்று முயன்று உதவி வருவது பெருமைப்படத்தக்க விஷயம்.
ஆன் ஒலிவியா
டைம் 100

3

மருத்துவ சிகிச்சை நம் அனைவருக்கும்.....ஆபெலியா டாஹ்ல்


உலகில் நடைபெறும் அநீதிகளை சகிப்புத்தன்மை மூலம் கடந்து செல்வது அல்லது அதை எதிர்த்து கேள்வி கேட்டு போராடுவது என இரு வாய்ப்புகள் நம் கண்முன்னே உள்ளன. அதில் அநீதிகளை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்த்து போராடுவோம் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தவர், ஆபெலியா.

இவர் மக்களுக்கு மருத்துவ வசதிகள் குறைவற, வேகமாக கிடைக்கவேண்டும் என்ற லட்சியத்தை கையில் எடுத்தார். இதற்கென 1987இல், பார்ட்னர்ஸ் இன் ஹெல்த் எற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி இயங்கத் தொடங்கினார். கர்ப்பிணிகள், காசநோயாளிகள் என நோய் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை ஆபெலியா உறுதிசெய்கிறார. அதற்கான முயற்சிகளை எடுக்கிறார். அநீதிக்கு தீர்வுண்டு அதை நாம் அனைவரும் இணைந்து தேட முடியும் என அவர் நம்புகிறார். அவரது உதவியுடன் நாம் அதைக் கண்டடைய முடியும் என்றே தோன்றுகிறது.
ஜான் க்ரீன்
டைம் 100

4

கருந்துளை மர்மங்கள் - பிரியம்வதா நடராஜன்
priyamvada natarajan

வான்வெளியில் உள்ள மர்மங்களைப் பற்றி கொள்கை, கோட்பாடுகளை உருவாக்குவதில் பெரிய மகிழ்ச்சி உள்ளது. குழப்பான பல்வேறு புதிர்களை ஒன்றாக சேர்த்து பதில்களை கண்டடைவது போன்றதுதான் அது. கடந்த ஆண்டு நவம்பரில் பிரியம்வதா, வானியலில் முக்கியமான சாதனை ஒன்றைச் செய்துள்ளார்.  பால்வெளியில் மிகப்பெரிய கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்பதை அவர் கண்டறிந்துள்ளார். வாயுக்களின் மேகங்கள் பால்வெளியில் விதைபோல விழுந்து பல்லாயிரக்க கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கலாம் என்ற கருத்தை கூறியுள்ளார். எனது சக வானியலாளரான பிரியம்வதாவின் ஆராய்ச்சி எப்போதுமே ஊக்கம் வழங்கி வந்துள்ளது. அவரது ஆராய்ச்சியின் காரணமாக, பால்வெளியின் தொடக்கம் பற்றிய மர்மங்களை சற்று அருகில் சென்று பார்க்க அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
செப் டோல்மன்
டைம் 100



கருத்துகள்