அறிவியலுக்கு அங்கீகாரம் அளிக்கும் பிரெட் காவ்லி பரிசு! - 2024ஆம் ஆண்டு எட்டு நபர்கள் தேர்வு

 

 

 

 

 






 

 

 

 

பிரெட் காவ்லி பரிசு - எட்டு நபர்கள் தேர்வு 


fred kavli prize


பிரெட் காவ்லி என்ற நார்வே - அமெரிக்க தொழிலதிபரின் நினைவாக பிரெட் காவ்லி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நார்வேயில் 1927ஆம் ஆண்டு எரெஜ்போர்ட் என்ற இடத்தில் பிறந்தவர் பிரெட். 1956ஆம் ஆண்டு, பொறியியல் பட்டம் பெற்றபிறகு அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தார்.  ஏவுகணைகளுக்கு சிப், சென்சார்களை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தார். ஓராண்டில் அங்கு தலைமை பொறியாளராக உயர்ந்து சாதித்தார்.

1958ஆம் ஆண்டு, காவ்லிகோ என்ற பெயரில தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இதன் வழியாக விமானம் தொடங்கி வீடுகளில் பயன்படுத்தும் மின்சாதனங்கள் வரையிலான பொருட்களுக்கு அழுத்த சென்சார்களை தயாரித்து விற்றார். பிரெட்டின் நிறுவனம் தயாரித்த சென்சார்கள், துல்லியமானவை, நிலையானவை, நம்பிக்கையானவை என்ற பெயரைப் பெற்றன.

2000ஆம் ஆண்டில் பிரெட், காவ்லிகோ நிறுவனத்தை 340 மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார். கிடைத்த பணத்தை வைத்து காவ்லி பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி, உலகம் முழுக்க மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஆராய்ச்சிகளுக்கு உதவிகளை வழங்கத் தொடங்கினார். பிரெட், வான் இயற்பியல், நரம்பியல், நானோ அறிவியல், கோட்பாட்டு இயற்பியல் ஆகிய துறைகளுக்கான இருபது பயிற்சி மையங்களை உருவாக்கி நடத்தினார். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மேற்சொன்ன துறைகளே முக்கியமானவைகளாக இருக்கும். எனவே, அதற்காக காவ்லி பரிசுகளை வழங்குவது எனக்கு உற்சாகம் தருகிறது என்று ஒருமுறை பேசினார். பிரெட் காவ்லி 2013ஆம் ஆண்டு மறைந்தார்.

2008ஆம் ஆண்டு தொடங்கி காவ்லி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஏழு அறிவியலாளர்களுக்கு வழங்கினர். இன்றுவரை பத்தொன்பது நாடுகளைச் சேர்ந்த எழுபத்து மூன்று அறிவியலாளர்களுக்கு காவ்லி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து பேர் நோபல் பரிசை வென்றவர்கள் என்பது கவனிக்க வேண்டிய அம்சம்.

ஒரு மில்லியன் பணப்பரிசு, விருதுக்கான சான்றிதழ், ஏழு செ.மீ அளவில் விருதுப்பதக்கம் வழங்கப்படுகிறது.  

வான் இயற்பியல்

david charbonneau
sara seager
 
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை் சேர்ந்த டேவிட் சார்போன்யு, மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த சாரா சீகெர் என்ற இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பால்வெளியில் உள்ள புறக்கோள்கள், அதன் அடிப்படை அம்சங்கள், வெளியிடும் அகச்சிவப்பு கதிர்கள், அதன் சூழல் ஆகியவற்றைப் பற்றிய கண்டுபிடிப்புகளை இரு ஆராய்ச்சியாளர்களுமே செய்துள்ளனர்.

நானோ அறிவியல்

robert langer
armand paul alivisatos
chad mirkin
எம்ஐடியைச் சேர்ந்த ராபர்ட் லாங்கர், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்மாண்ட் பால் அலிவிஸாடோஸ், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் சாட் மிர்க்கின் ஆகியோர் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். மூளைப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், சிசோபெரெனியா ஆகிய நோய்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மருந்து விநியோக கண்டுபிடிப்பு செய்வதைக் கண்டறிந்தவர் லாங்கர். அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியலில் பயன்படும் குவாண்டம் டாட்ஸ் என்பதை அலிவிஸாடோஸ் கண்டறிந்தார். மரபணு முறைப்படுத்தல், நோய் எதிர்ப்புசக்தி சிகிச்சை ஆகியவற்றில் பயன்படும் ஸ்பெரிகல் நியூக்ளிக் அமிலம் என்பதைக் கண்டறிந்தவர் மிர்க்கின்.

நரம்பியல்
nancy kanwisher
winrich freiwald
doris tsao

எம்ஐடியைச் சேர்ந்த நான்சி கான்விஷர், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வின்ரிச் பிரெய்வால்ட், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோரிஸ் சாவோ ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஒருவரின் முகத்தை அடையாளம் காண்பது பற்றி மூளையில் செய்த ஆய்வுக்காக மூவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. மனித மூளையில், பிறரை அடையாளம் கண்டுகொள்ளும் இடத்தை கான்விஷர் அடையாளம் கண்டு சாதித்துள்ளார். மூளையிலுள்ள தனி செல்களை வைத்து சோதித்து அதன் முழு நரம்பியல் அமைப்பையும் வரைபடமாக மாற்றும் நுட்பத்தை சாவோ, வின்ரிச் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

https://indianexpress.com/article/explain
ed/explained-sci-tech/explained-kavli-
prize-9391030/


 

கருத்துகள்