ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

 



ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாடு எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதில், பொருளாதார இலக்கு ஒன்றை தீர்மானிக்க இருந்தனர். 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கு தாண்டி செல்லவேண்டும் என்பதே லட்சியம். அப்போதுதான் காலநிலை மாற்ற திட்டத்திற்கு வளரும் நாடுகளுக்கு உதவ முடியும். வரும் நவம்பர் மாதம் அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற மாநாடுக்கு முன்னதாக நிதி இலக்கை திட்டமிட இருந்தனர். ஆனால் நோக்கம் நினைத்த திசையில் செல்லவில்லை.

காலநிலை மாற்ற அறிக்கையில் நாற்பத்தைந்தாவது பக்கம், இன்புட் பேப்பர் என்ற சொல் உள்ளது. இதில், நாடுகள் வழங்கும் நிதி, அது செலவழிக்கப்படும் விதம், அதை அமைப்பினர் கண்காணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை அழுத்தம் கொடுத்து கூற வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத் திட்டங்களில் நிதியாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் செலவிடப்படும் விதம், ஏற்பட்ட தாக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவது 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை மாநாட்டில் பேசப்பட்டுவிட்டது. நாடுகளும் ஒப்புக்கொண்டன. இன்று, வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, வறுமையான வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு செலவிடும் நிதியில் பெரும் இடைவெளி உள்ளது.

காலநிலை மாற்ற செயல்பாடுகளை, வளர்ந்த பணக்கார நாடுகளிடையே ஐ.நாவின் காலநிலை அமைப்பு நிர்வாகம்(யுஎன்எஃப்சிசிசி) செய்கிறது. தொழில்துறை மூலம் அதிக மாசுபாடுகளை வளர்ந்த, பணக்கார நாடுகளே செய்து வருகின்றன. எனவே, காலநிலை மாற்ற திட்டங்களுக்கான நிதியை அந்நாடுகளே வழங்கவிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு வளர்ந்த நாடுகள் நிதியைத் தர ஒப்புக்கொண்டன. 2020ஆம் ஆண்டு முதல் காலநிலை மாற்ற நிதியை வழங்கி வருகின்றன. நூறு பில்லியன் என்ற இலக்கு 2022ஆம் ஆண்டு எட்டப்பட்டதாக பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்தது.

நாடுகள் வழங்கும் நிதியின் அளவு அப்படியே இருக்காது. 2025க்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் ஆறு ட்ரில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டியிருக்கும். வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்ற திட்டங்களை செயல்பாட்டில் எடுத்து வர 215 பில்லியன் டாலர்கள் தொடங்கி 387 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக தூய ஆற்றல் சக்தியை நடைமுறைக்கு கொண்டு வர 4.3 ட்ரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இத்தொகை 2030வரை ஆண்டுதோறும் தேவைப்படுகிறது. அதற்குப் பிறகு ஆண்டுதோறும் 5 ட்ரில்லியன் டாலர்கள் நிதி அவசியமாகும். இந்த வகையில் செலவழித்தால்தான் பூஜ்ஜியம் என்ற மாசுபாட்டு இலக்கைத் தொட முடியும்.

வளர்ந்த பணக்கார நாடுகள் இப்படி அளிக்க வேண்டிய நிதியைக் குறிப்பிட்டு ஏதும் கூறவில்லை. ஆனால், ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்களைக் கடந்து செல்லும் நிதி அளவு பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளனர். காலநிலை மாற்ற நிதியை வழங்குவது புதிதாக தீர்மானிக்க வேண்டியது அல்ல. அதை 2015ஆம் ஆண்டே முடிவு செய்துவிட்டனர். நாடுகளும் ஏற்றுக்கொண்டு விட்டன. 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலர்களை வழங்கவேண்டும் என்று இந்தியா பேசியது. அரபு நாடுகள், வழங்கப்படும் நிதித்தொகை 1.1 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கவேண்டும் என்று கோரியது. ஆப்பிரிக்க நாடுகள் 1.3 ட்ரில்லியன் நிதியைக் கோருகின்றன.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இணைப்பு 2 இல் ஐரோப்பாவைச் சேர்ந்த 25 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள், குறிப்பிட்ட நிதித்தொகையை வளரும் நாடுகளுக்கு தர ஒப்புதல் தந்துள்ளன. ஆனால் இதில் சீனா, தென்கொரியா, எண்ணெய் வள நாடுகள் இடம்பெறவில்லை. ஜெர்மனியின் போன் நகரில் சீனா, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போரிடுவதாக கூறியது. ஆனால் கூடுதலாக எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை என்று உறுதியாக கூறிவிட்டது. ஐரோப்பா நாடுகளும் அளிக்கவேண்டிய நிதி விஷயத்தில் பிற நாடுகளுக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறியுள்ளது. காப் 15 மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், காலநிலை மாற்ற நிதியாக நூறு பில்லியன் டாலர்களை முன்மொழிந்தார். இவரின் பரிந்துரையை இணைப்பு 2 இல் உள்ள நாடுகள் பின்னர் ஏற்றுக்கொண்டன.

ஐஇ
NO OUTCOME IN BONN: WHY MONEY IS KEY TO CLIMATE ACTION

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்