இடுகைகள்

சந்தைக்குப் புதுசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்தைக்குப் புதுசு - ஒரே ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் போதும். போனை கழற்றி மாட்டிவிடலாம்!

படம்
  சந்தைக்குப் புதுசு  ஃபேர் போன் 650 டாலர்கள் விலை கொண்ட ஸ்மார்ட்போன். இந்த போனிலுள்ள பாகங்களை நாமாகவே அவர்கள் கொடுக்கும் ஸ்க்ரூ ட்ரைவர் வைத்து கழற்றி மாட்டிக்கொள்ளலாம். பழுது பார்க்கலாம். கெட்டுப்போன பாகங்களை மாற்றிக்கொள்ளும் விலையும் குறைவுதான். திரை போய்விட்டதா உடனே அதை தூக்கியெறிந்துவிட்டு புதிய போன் வாங்குபவர்கள், இந்த போனை வாங்கலாம். ஐந்து ஆண்டு ஆண்ட்ராய்ட் அப்டேட் உண்டு. அதே ஆண்டுகள் வாரண்டியும் உண்டு. இந்த போன் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளவர்கள் ஆர்டர் போட்டுத்தான் வாங்கவேண்டும்.  பிஎம்டபிள்யூ ஐ5 முழுக்க எலக்ட்ரிக் கார். சார்ஜ் போட்டால் முப்பது நிமிடங்களில் எண்பது சதவீதம் சார்ஜ் ஏறுகிறது. ஆனால் இந்த கார் முழுக்க எலக்ட்ரிக் காராக மாற்ற பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த காலதாமதம் சற்று ஏமாற்றமளிக்கிறது. விலை 68,800 லிருந்து தொடங்குகிறது. இதில் நிறைய மாடல்கள் உள்ளன. காரில் கேம் விளையாடும்போது உங்கள் ஸ்மார்ட்போனை கண்ட்ரோலராக பயன்படுத்தலாம். 321 கி.மீ. தொலைவு தொடங்கி 361 கி.மீ. வரை செல்ல முடியும்.  மோனோ பிரைஸ் டேபிள் லேம்ப் இந்த நிறுவனம் ஒருவர் வீட்டிலே

மார்க்கெட்டுக்கு புதுசு - க்யூபோ கிம்பல், அடிடாஸ் ஷூ, ஆம்பிரேன் பவர்பேங்க்

படம்
  க்யூபோ ஹேண்ட்ஹெல்ட் கிம்பல் விலை 6,990 மட்டுமே இதுபோன்ற கருவிகளின் தாயகம் சீனாதான். க்யூபோவை தயாரித்து நமக்கு அளிப்பது ஹீரோ எலக்ட்ரானிக்ஸ். கருவியை க்யூபோபுரோ ஆப் மூலம் இயக்கலாம். இந்த போனை வைத்து மயக்கும் யூட்யூப் வீடியோக்களை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றை சுட்டுத் தள்ளலாம்.. ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் வைத்துள்ள போன் கொஞ்சம் லைட்டாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஆப்பிள் 14 பயன்படுத்துகிறீர்கள் என்றால், க்யூபோ கிம்பலை பயன்படுத்தினால் வீடியோ சற்று தடுமாறும். ஏனெனின் அந்த போனின் எடைக்கும், க்யூபோவின் ஸ்டாமினாவுக்கும் சற்று பிரச்னை உள்ளது. வட்டவடிவில் பட்டன்கள், வீடியோவுக்கு பட்டனை சற்று நீளமாக அழுத்தினால் போதுமானது. யூஎஸ்பி வடிவில் கிம்பலை சார்ஜ் செய்துகொள்ளும் அமைப்பு உள்ளது. 5வி 2ஏ அடாப்டரை பயன்படுத்தினால் எளிதாக சார்ஜ் செய்துகொள்ளலாம். பவர் பட்டனை அழுத்தினாலே போர்ட்ரைட், லேண்ட்ஸ்கேப் என படமாக்கும் விதத்தை  மாற்றி ஸ்விட்ச் செய்துகொள்ளலாம். பொருட்களை, முகத்தை எளிதாக ட்ராக் செய்ய முடிகிறது. மீதியெல்லாம் நீங்கள் வாங்கி ஆராய்ச்சி செய்துகொள்ளுங்கள். குறைந்த பட்ஜெட்டில் நிறைய வசத

வீட்டின் ஹாலில் இருக்கவேண்டிய பொருட்கள்! - ஹெட்செட், புரஜெக்டர், ஐபேட் புரோ, ஸ்பீக்கர்

படம்
  ரேஷர் பிளாக் ஷார்க் வி2 கேமிங் ஹெட்செட் கம்ப்யூட்டர், கன்சோல் என இரண்டிலும் இந்த ஹெட்செட்டைப் பயன்படுத்தலாம். நீண்ட நேர விளையாட்டுக்கும் ஏற்றதாக ஹெட்செட் உள்ளது. ஒலியின் தரமும், மைக்கும் கூட சிறப்பாக இயங்குகிறது.  விலை 9,000 எப்சன் இஹெச் டி டபிள்யூ 7100 4 கே புரஜெக்டர். இதனை வீட்டிலயே  பொருத்தி நோய்த்தொற்று பாதிப்பில்லாமல் படங்களைப் பார்க்கலாம். இந்த புரஜெக்டர் இருந்தால் உங்கள் தலைக்கு பின்னே சோளப்பொரியை கறுக் முறுக் என சாப்பிடும் சத்தம் இருக்காது. யாரும் போனை நோண்டிக்கொண்டு படம் பார்க்கும் அனுபவத்தை கெடுக்க மாட்டார்கள். ப்ளூடூத் வசதி இருப்பதால் எளிதாக ஸ்பீக்கர்களில் பொருத்தி பாடலை படத்தை ரசிக்கலாம். இதில் வெளிவரும் ஒளியும் சிறப்பாக இருப்பதால், இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறோமே என்ற பயமும் வராது.  விலை 1,599 சோனி பிஎஸ் எல்எக்ஸ் 310பிடி ப்ளூடூத் டர்ன்டேபிள் நீங்கள் கிராம போனில் பாட்டு கேட்கும் ஆள் என்றால், இந்த பொருள் உங்களுக்கானதுதான். சோனியின் இந்த தயாரிப்பு கொஞ்சம் நவீனமானது.  ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஹெட்போன் எதனுடனும் இணைத்துக்கொள்ளலாம். ரிலாக்சாக படுத்துக்கொண்டே இசைக்கடலில்

15 ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போன் வாங்கப்போகிறீர்களா? - இந்த போன்களை ட்ரை செய்யுங்கள்

படம்
  போகோ எம்3 புரோ 5ஜி உலகத்தில் ஆடை இல்லாமல் கூட இருக்கலாம். அதைக்கூட புது பேஷன் என்று சொல்லிவிடலாம். ஆனால் பழைய போனுடன் இருந்தால் வீட்டில் உள்ள குட்டீஸ் கூட மதிக்காது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவது பட்ஜெட் போன்கள்தான்.இந்த பதினைந்தாயிரம் ரூபாய் கேட்டகிரியில் கூட 5 ஜி லெவல் போன்களும் உண்டு. சாம்சங், போகோ, ரியல்மீ, ஜியோமி, மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் போன்கள் இவை.  போகோ எம்3 புரோ 5ஜி 14,599 ரூபாய் போன். ஒருரூபாய் தந்துவிடுவார்கள் என நம்பலாம்.  5 ஜி போன் இது. மீடியாடெக் 700 சிப், 90 ஹெர்ட்ஸ்ல் திரை அடிக்கடி புத்துயிர் பெறுமாம். 5000எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி கேமரா பின்புறம் உள்ளது. மேற்சொன்ன காசுக்கு ஸ்டைலான போனு வேணும் சேட்டா என்றால், இதையே இ வலைத்தளங்களில் ஆர்டர் செய்து மோட்சம் பெறுங்கள்.  சாம்சங் கேலக்ஸி எம்32 அதிக நேரம் பைத்தியம் பிடித்த வெட்டுக்களி போல சமூக வலைத்தளங்களில் பறந்து திரிபவரா, ஓடிடியில் வெப்சீரிஸ், திரைப்படங்கள் என ஏராளமாக பார்க்கணுமே ப்ரோ என்பவரா உங்களுக்காகத்தான் இந்த போன். 12499 ரூபாயில் இருந்து விலை தொடங்குகிறது. 6ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, அமோல்ட் திரை. 6.4 இன்ச்சில்

சிறந்த டிவி, கேட்ஜெட், சூழலுக்கு உகந்த நிறுவனம், பிராண்ட்! - சந்தைக்குப் புதுசு

படம்
                  சி றந்த கேட்ஜெட் சோனி பிளேஸ்டேஷன் 5 இந்த விளையாட்டு அதன் தரத்திலும் விலையிலும் கூட மக்களின் மனம் கவர்ந்துள்ளது . அதிநவீன டிவி இல்லாவிட்டாலும் அதிலும் இதனை இணைத்து விளையாட முடியும் . எக்ஸ்பாக்ஸை விட பல படிகள் முன்னேற்றம் கண்டுள்ளது . இந்த வகையில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது . ஃபிட்பிட் ஏஸ் 3 குழந்தைகளின் தூக்கம் , விளையாட்டு ஆகியவற்றை இதன் மூலம் எளிதாக கண்காணிக்கலாம் . கலோரி போன்றவற்றை போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் கையில் கட்டிக்கொள்ள எளிதாக இருக்கிறது . அதிகநேரம் இதனை அணிந்திருந்தாலும் கூட எரிச்சல் ஏற்படுவதில்லை . வார நாட்களில் சில முறை சார்ஜ் செய்யும்படி இருக்கும் . சிறந்த கண்டுபிடிப்பு சாம்சங் மைக்ரோஎல்இடி எல்இடி ஓஎல்இடி போன்ற திரைகளில் உள்ள பலவீனத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் மைக்ரோஎல்இடி வாங்கலாம் என்று முடிவெடுக்கும்படி புதிய டிவியை உ்ருவாக்கியிருக்கிறார்கள் . ஒருவகையில் சாம்சங்கின் முடிவு எதிர்காலத்திற்கான முன்னடி என்று கூட சொல்லலாம் . பத்தாயிரம் மணி நேரங்கள் பாதுகாப்பு எ

சந்தையில் அசத்தும் இசைக்கிள்கள்!

படம்
              இ சைக்கிள் சக்தி சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கான இடங்கள் கூட கார் பார்க்கிங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன . இருந்தாலும் கூட எரிபொருள் விலையுயர்வு ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் சைக்கிள் என்பது முக்கியமானதுதான் . பராமரிப்பு செலவு குறைவு என்பதோடு இதனை பயன்படுத்துவது உற்சாகமான அனுபவத்தை தரும் என்பது நிச்சயம் . இ சைக்கிள்கள் எடை குறைவாக , கவர்ச்சிகரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன . பேட்டரியுடன் ஆற்றலுடன் உள்ளதோடு காரை விட குறைந்த மாசுபாட்டைய ஏற்படுத்துகிறது . இப்போது இதில் சிறப்பான இ சைக்கிள்களைப் பார்ப்போம் . ஆல்ரவுண்டர் பெஸ்ட் டர்போ வாடோ எஸ்எல்   சைக்கிளின் பிரேம்களில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள ஸ்டைலான இபைக் இது . பார்க்க சாதாரண சைக்கிள் போல இருந்தாலும் மணிக்கு 28 கி . மீ வேகத்தில் காட்டுப்பகுதிகளுக்குள் செல்லலாம் . எடை 33 பவுண்டுகள்தான் என்பதால் சைக்கிளின் ஹேண்டிலை பிடிக்கும்போது கை வலிக்காது . வேறுபட்ட நிலப்பரப்புகளிலும் அதிக கஷ்டமின்றி பயணிக்க முடியும் . விலை 4,750 டாலர்கள் சிறந்த பயணம் பேட்ச் இபைக்   2,100 டாலர்களுக்கு வாங்கும

பெருந்தொற்றை சமாளிக்க வந்துவிட்டது புதிய பேக்! - சந்தைக்குப் புதுசு

படம்
                சந்தைக்குப் புதுசு ! சாம்சங் கேலக்ஸி புரோ லேப்டாப்    போனிலிருந்து லேப்டாப் சந்தை பக்கம் சாம்சங் தனது கவனத்தை திரும்பியிருக்கிறது . இன்டெலின் பதினோராவது தலைமுறை சிப்பைக் கொண்டுள்ளது . அமோல்டு திரையை போனிலிருந்து எடுத்து லேப்டாப்பிலும் கொண்டு வந்திருக்கிறார்கள் . போட்டி நிறுவனமாக எல்ஜியை விட மொத்த எடையில் நூறு கிராம் குறைந்துள்ளது . சாம்சங் போனை சற்று அப்டேட் செய்து லேப்டாப் செய்தது போன்ற உணர்வு பயனர்களுக்கு ஏற்படலாம் . காரணம் , போனிலிருந்த பல அம்சங்களை லேப்டாப்பிற்கு சாம்சங் மாற்றியுள்ளது . சிங் செல் ஆல்பா ஸ்பீக்கர் வடிவமைப்பாளர் கிரிஸ்டோபர் ஸ்ட்ரிங்கர் உருவாக்கியுள்ள ஸ்பீக்கர் இது . இவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவசாலி . 3 டி வடிவில் இசை கேட்கும் அனுபவம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள் . இதிலிருந்து வரும் இசையை டிரைபோனிக் சவுண்ட் என்று கூறுகிறார்கள் . இதனால் இதனை டிராமா முதல் திரைப்படம் வரை இணைத்து கேட்கலாம் . இதனுடன் கட்டுப்படுத்த தனி ஆப்பும் உள்ளது . கெனான் இஓஎஸ் ஆர் 3   விளையாட்டு , வனம் சார்ந்த சம்பவங்களை