மார்க்கெட்டுக்கு புதுசு - க்யூபோ கிம்பல், அடிடாஸ் ஷூ, ஆம்பிரேன் பவர்பேங்க்
க்யூபோ ஹேண்ட்ஹெல்ட்
கிம்பல்
விலை
6,990 மட்டுமே
இதுபோன்ற
கருவிகளின் தாயகம் சீனாதான். க்யூபோவை தயாரித்து நமக்கு அளிப்பது ஹீரோ எலக்ட்ரானிக்ஸ்.
கருவியை க்யூபோபுரோ ஆப் மூலம் இயக்கலாம்.
இந்த போனை
வைத்து மயக்கும் யூட்யூப் வீடியோக்களை, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றை சுட்டுத் தள்ளலாம்..
ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் வைத்துள்ள போன் கொஞ்சம் லைட்டாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆப்பிள் 14 பயன்படுத்துகிறீர்கள் என்றால், க்யூபோ கிம்பலை பயன்படுத்தினால் வீடியோ சற்று
தடுமாறும். ஏனெனின் அந்த போனின் எடைக்கும், க்யூபோவின் ஸ்டாமினாவுக்கும் சற்று பிரச்னை
உள்ளது.
வட்டவடிவில்
பட்டன்கள், வீடியோவுக்கு பட்டனை சற்று நீளமாக அழுத்தினால் போதுமானது. யூஎஸ்பி வடிவில்
கிம்பலை சார்ஜ் செய்துகொள்ளும் அமைப்பு உள்ளது. 5வி 2ஏ அடாப்டரை பயன்படுத்தினால் எளிதாக
சார்ஜ் செய்துகொள்ளலாம்.
பவர் பட்டனை
அழுத்தினாலே போர்ட்ரைட், லேண்ட்ஸ்கேப் என படமாக்கும் விதத்தை மாற்றி ஸ்விட்ச் செய்துகொள்ளலாம். பொருட்களை, முகத்தை
எளிதாக ட்ராக் செய்ய முடிகிறது. மீதியெல்லாம் நீங்கள் வாங்கி ஆராய்ச்சி செய்துகொள்ளுங்கள்.
குறைந்த பட்ஜெட்டில்
நிறைய வசதிகள் இருக்கிற கிம்பல் என்றால் அது க்யூபோதான். சிறப்பான தரம், எளிதாக மடித்துக்கொள்ளும்
வடிவமைப்பு, நிறைய வசதிகள் என அனைத்திலும் டிக் அடிக்கிறது.
லேண்ட்ஸ்கேப்,
போர்ட்ரைட் மாறும் விதம்தான் சற்று மேம்படவேண்டிய தேவையிருக்கிறது.
Quboworld.com
Qubo handheld
gimbal
ஆக்டோஃபிட் ஸ்மார்ட்ஸ்கேல் புரோ மேக்ஸ்
விலை
5,999
புரோ, மேக்ஸ்,
ஸ்மார்ட் என வந்ததும் ஆப்பிள் கம்பெனியின் புது தயாரிப்போ என பயப்படாதீர். ஆக்டோஃபிட்
வேறு ஒரு தனி நிறுவனம்.
எடை பார்க்கும்
மெஷினில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு விஷயங்களை பார்க்கலாம். வேண்டுமென்றால்
போனில் நிறுவியுள்ள ஆப் மூலம் பிரிண்ட் அவுட் கூட எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இதில் நீங்கள்
ஏறி நின்றாலே பதினெட்டு நொடிகளில் உடல் பற்றிய தற்போதையை நிலையை உடனே காட்டிவிடும்.
மேலதிக தகவல்களை போனில் உள்ள ஆப் மூலம் அறியலாம்.
இந்த விலையில்
நிறைய வசதிகள் உள்ள எடை எந்திரத்தை வாங்குவது கடினம். உடலைப் பற்றிய விரிவான தகவல்களைக்
கொடுக்கிறார்கள். பயன்படுத்த எளிது. ஜிம், மருத்துவமனையில் வாங்கி வைத்து ஆக்டோஃபிட்
நிறுவனத்திற்கு சந்தாவும் செலுத்தினால் அவர்கள் 250க்கும் மேற்பட்ட பயனர்களின் தகவல்களை
ஒழுங்குபடுத்தி தருகிறார்கள். மேலும் பல்வேறு வசதிகளை அளிக்கிறார்கள்.
Actofit.com
அடிடாஸ் பல்ஸ் ஷூ
விலை 15,999
அடிடாஸ் இப்போது
கடலில் கிடைக்கும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்து ஷூக்களை தயாரிக்கிறது. இந்த பல்ஸ்
ஷூக்கு உள்ள விஷேசம் இது 3டி பிரிண்டிங்கில் தயாராகி உள்ளது என்பதுதான். எனவே, இந்த
ஷூ சற்று கனமானது என்றாலும் போட்டுக்கொண்டு மாரத்தான்களுக்கு, தடகளப்போட்டிகளுக்கு
செல்லலாம்.
தரையில் நல்ல
பிடிமானம் கொடுக்கிறது. பார்க்கவும் அழகு.
Adidas.co.in
ஆம்பிரேன்
ஏரோசின்க் பிபி10
1,999
வயர்லெஸ்
பேட்டரி. 10 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி.
இதில் நான்கு
எல்இடி இண்டிகேட்டர் உள்ளது. அதில் சார்ஜ் எந்தளவு உள்ளது என பார்த்துக்கொள்ளலாம். பேட்டரி வைத்துக்கொள்ள தனி ஸ்டாண்ட் கொடுக்கிறார்கள்.
ஆப்பிள் போன் 13, 14 புரோ மேக்சிற்கு இந்த வயர்லெஸ் பேட்டரியைப் பயன்படுத்த முடியாது.
மேக்சேஃப் எனும் வசதியைப் பயன்படுத்தி போனில் ஒட்டி சார்ஜை ஏற்றலாம்.
வேகமாக சார்ஜ்
ஏறுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதை பலம் என்பதா, பலவீனம் என்பதா என்று கூற
முடியவில்லை. காந்தத்தின் திறனை அதிகரித்திருந்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் பார்க்க
பெரிதாக இருக்கிறது. சிலசமயம் வயர்லெஸ் சார்ஜ் என்பது வேலை செய்யமாட்டேன் என அடம் பிடிக்கிறது.
இன்னும் கொஞ்சம் காசு போட்டால் திறன் கூடிய பேட்டரியை வாங்கலாம்.
Ambraneindia.com
கருத்துகள்
கருத்துரையிடுக