கொலைகார ஆண் துணைக்கு பெண்கள் உதவி செய்வதற்கான காரணங்கள்!

 











உணர்வு ரீதியான உறவுகள் என்று சில உண்டு. ஒருவரின் காதலுக்காக, அவர் தன்னை விட்டுப்போக கூடாது என்பதற்காக.. நிறைய குற்றச்செயல்களை அறியாமலேயே செய்வார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படி நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இதில், வோரல் என்பவர்தான் குற்றவாளி. இவர், தன்னைக் காதலிக்கும் மில்லர் கொண்டு வரும் இளம்பெண்களை வல்லுறவு செய்து கொல்வார். சவங்களை புதைக்கும் பாக்கியம் வேறு யாருக்கு, மில்லருக்குத்தான். இப்படி ஏழு பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இதை சரி, தவறு என எப்படியும் மில்லருக்கு கூறத் தெரியவில்லை. அவருக்கு வோரலின் காதல் தேவைப்பட்டது. ஆனால் வோரல் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை த் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மில்லரைப் பிடித்தனர். வோரல் மீது கொண்ட காதலுக்காகத்தான் குற்றங்களை செய்தேன். கொலை செய்யவில்லை. உடல்களைப் புதைத்தேன் என்று சொல்லி புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார்.

இதுபோன்ற கொலைஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர், எளிதாக குற்றங்களை தான் செய்துவிட்டு அதற்கான பல்வேறு செயல்களை பிறரை செய்யவைப்பவராக இருப்பார்..இப்படி ஆணைகளைக் கேட்டு நடப்பவர், மனதளவில் சமநிலை இல்லாதவராக எளிதில் கோபம் கொள்வராக இருப்பார். சரியான முடிவுகளை எடுக்க முடியாதவராக செயல்படுவார். இப்படி இருப்பதால் இன்னொருவர் எளிதாக இவரை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்த முடிகிறது.  ஆண்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுக்காக பெண்களை கடத்தி வல்லுறவு செய்ய உதவுவது அவர்களின் மனைவிகளாகவே இருக்கும். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள், இதற்கு காரணம் அவர்களின் சிறுவயதில் பாலியல் சீண்டல் அல்ல,து  வல்லுறவு சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டதுதான். அதை அவர்கள் தங்களது ஆண் இணையர் மூலம் திட்டமிட்டு பழிவாங்குவது போல தீர்த்துக்கொள்கிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக இருந்த சில குற்றத்தம்பதிகளின் பெயர்கள் இதோ.. சார்லின் கலேகோ பத்து பெண்களை கொல்வதற்காக தனது கணவரிடம் கூட்டி வந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட், கேத்தரின் ஜோடி, நான்கு நபர்களை வீட்டுக்கு கூட்டி வந்து கதையை முடித்தனர். கர்லா ஹோமோல்கா தனது கணவர் பால் கற்பழிக்க தனது பதினைந்து வயது சகோதரிக்கு மயக்க மருந்து கொடுத்து தயார்படுத்தினார். அதற்கு முன்னரே இந்த தம்பதி இரு பெண்களைக் கொன்று உடல் பாகங்களை வெட்டி வைத்த சாதனையை செய்திருந்தனர்.

பெண்கள் எப்படி குற்றங்களுக்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்பதற்கு உளவியலாளர் ராபர்ட் கூறியுள்ள சில அம்சங்களைப் பார்ப்போம்.

எளிதாக பிறருக்கு அடிபணியும் இயல்புள்ளவர்கள்

காதலுக்கு அடிபணிந்து குற்றங்களை செய்பவர்கள்

உடலுறவு சார்ந்த படங்களைக் காட்டி, செயல்பாடுகளை செய்ய வைத்து அடிபணிய வைத்தல்

பெண்களை குடும்பத்தை விட்டு நண்பர்களை விட்டு  தனித்து பிரித்தல்

உடல்ரீதியாக, உள்ள ரீதியாக  தண்டித்து பெண்ணின் தன்னம்பிக்கையை உடைத்தல்.

 

ஆண், பெண் என இருவரும் சேர்ந்து குற்றம் செய்கிறார்கள். எந்தளவுக்கு இருவரின் நம்பிக்கையும் இருக்கும் என பார்ப்போம். பொதுவாக இருவரின் நம்பிக்கை உடைவது காவல்துறையில் பிடிபடும்போதுதான். பொதுவாக தன்னைத்தானே விரும்பும் சுயமோகியாக உள்ளவர் பிறரைக் காத்துக்கொண்டே இருக்க முடியாது. அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு பிறரை அவர்தான் அனைத்து குற்றங்களும் செய்தார் என்று அணி மாறிவிடுவார். இதனால் இருவர் செய்த குற்றங்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும். இதில் சில விதிவிலக்குகள் உண்டு. ரோஸ், ஃபிரெட் ஆகிய  இருவரையும் விசாரிக்கும்போது ஃபிரெட் ரோஸ் செய்த குற்றங்களை வெகுநேரம் விட்டுக்கொடுக்கவில்லை. பிறகுதான் விதிப்படி நடக்கட்டும் என ரோஸை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டார்.

உளவியல் ஆய்வாளர்கள் ஆண், பெண் இணையர் சதவீதம் எல்லாம் கணக்கிட்டு பார்த்துள்ளனர். நாம் அதற்கெல்லாம் போகப்போவதில்லை. ஆண், பெண், ஆண், ஆண் என எப்படி கூட்டு சேர்ந்தாலும் அங்கு அதிகாரச் சண்டை,முரண்பாடுகள், இறுதியில் பிரிவு என்பது இயல்பாகவே நடக்கும்.


கருத்துகள்