குடும்பத்துடன் கொலை செய்பவர்களின் மனநிலை
1870ஆம்
ஆண்டில் ஹெல் பெண்டர்ஸ் என்ற புகழ்பெற்ற கொலைகார குடும்பம் இருந்தது. இப்படி நான் கூறுவது
1873க்குப் பிறகுதான். அதற்கு முன்வரை ஆன்மிக அனுபவம் என்று சொல்லி பெண்டர் குடும்பம்
வழிப்போக்கர்களை வீட்டுக்கு அழைத்து சோறிடுவார்கள். பிறகு சுத்தியலை வைத்து மண்டையை
சிதறடித்து ஆட்களைக் கொன்று அவர்களின் பணத்தை சுருட்டுவதுதான் பெண்டர்களின் பாணி. உடல்களை
பூத்தோட்டத்தில் புதைத்து விடுவார்கள்.
மருத்துவர்
வில்லியம் என்பவரின் தம்பி, பெண்டரின் வீட்டிற்கு கேட்டியின் ஆன்மிக அனுபவத்தை பெற
வந்தார். வந்தவர் அப்படியே சுத்தி மூலம் அடிக்கப்பட்டு முக்தி அடைந்துவிட்டார். இதை
தெரியாத மூடரான வில்லியம் தம்பியைக் காணவில்லை என புகார் கொடுத்துவிட்டார். அந்த நேரம்
மழை சீசன் வேறு. மழைபெய்து பூத்தோட்டம் முழுக்க இளகிப்போக புதைத்த பிணங்கள் வெளியே
வந்துவிட்டன. காவல்துறை பெண்டரின் குடும்பத்தை பிடிக்கும் முன்னேர அனைவரும் தப்பி விட்டார்கள். பத்தாயிரம்
டாலர்களுக்கு மேல் ஆட்களைக் கொன்று சுருட்டியது பெண்டர் குடும்பம் என காவல்துறை அறிக்கை
வெளியிட்டது.
கொலைக்கு
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் கிடையாது. கொலை தொடர்பாக ஒரே மாதிரியான எண்ணங்கள்
இருந்தால், அவர்கள் ஒன்றாக சேர்ந்து குற்றங்களை செய்கிறார்கள். இப்படி கொலைகளை செய்வதில்
மகிழ்ச்சி, பொருளாதார ஆதாயமும் இருக்கும். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். பெல்ஜியத்தில்
வாழ்ந்த ஆண்ட்ராஸ் பாண்டி, தனது மகள் ஆக்னஸை பதிமூன்று வயதில் இருந்து வல்லுறவு செய்து
தான் சொல்வதை செய்யுமாறு மிரட்டி வந்தார். தனது மகளை வைத்தே இரண்டு மனைவிகள், பிற பிள்ளைகளைக்
கொன்றார். துப்பாக்கியால் சுட்டு, சுத்தியலால் அடித்து என இருவகைகளில் கொலை செய்தனர்.
மகள் ஆக்னஸ் உடலை வெட்டி அமிலத்தில் கரைக்க உதவினாள். பிறகு குற்ற உணர்ச்சி காரணமாக காவல்துறையில் தனது அப்பா செய்த கொலைகளை புகார்
கூறினார். காவல்துறை விசாரித்தபோது ஆண்ட்ராய் அப்படி கொலைகளை செய்யவில்லை. இறந்த உறவினர்களை
தேவதைகள் மூலம் தொடர்புகொண்டு பேசுவதாக கூறினார். ஆக்னசுக்கு கொலைக்கு உடந்தை என்ற
வகையில் 21 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கினர். ஆக்னசின் தந்தைக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக