இளமையில் தொடர் கொலைகாரர்களைத் தடுக்கும் வழிமுறை - டொனால்ட் செய்த உளவியல் ஆய்வு

 











ஜாசன் தான் கொன்ற பிணங்களை வைத்து காட்டில் மரங்களுக்கு இடையில் தனி கல்லறையை உருவாக்கி வைத்திருந்தார். நிலவொளியில் விலங்குகளைக் கொல்வதன் மூலம் அவர் விரும்பிய பெண்களைக் கொல்ல முடியும் அதற்கான சக்தி கிடைக்கும் என கற்பனை செய்தார்.

பெண்ணைக் கொன்று உடலை சிதைத்து கழுத்தில் ஆண்குறியை நுழைத்து பாலுறவு செய்யவேண்டுமென கனவு கண்டு அதைக்கூட தனது நோட்டில் எழுதி வைத்திருந்தார். வன்முறை, குற்றங்கள், கொலைகள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள திட்டம் போட்டு இறங்கி சாதித்த மனிதர்தான் ஜாசன். அவரின் ரோல் மாடல்கள் டெட்  பண்டி, லூகாஸ், மேன்சன் ஆகியோர்தான். இவர்களின் வரிசையில் இடம்பெறுவதுதான் ஜாசனின் கனவு, ஆசை, பேராசை, லட்சியம் என எல்லாமே….

அசுரகுலம் தொடர்வரிசை நூல்களில் முந்தைய நூல்களிலேயே சிலர் பிறக்கும்போது கெட்ட இயல்பில் பிறக்கிறார்கள். பிறருக்கு சூழ்நிலை அப்படி அமைந்துவிடுகிறது என கூறியிருந்தோம். ஆனால் சிலருக்கு சிறுவயதில் தோன்றும் அறிகுறிகளைக் கவனித்தாலே அவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தி சிகிச்சைகள் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் பலரும் அதைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதாக மாறுகிறது. ஒரு செயலுக்கு வன்முறையான வழியில் செயலாற்றுவது, வலியைப் பொறுத்துக்கொள்வது, நல்லது, கெட்டது என புரிந்துகொண்டு முடிவு எடுக்கத் தெரியாத பண்பு, பிறர் மீது இரக்கம் தோன்றாத தன்மை ஆகியவற்றை சுற்றியிருக்கும் உறவுகள் நட்புகள் உணர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து சேதாரத்தை தவிர்க்கலாம். இந்த வகையில் உளவியல் வல்லுநர் டொனால்ட் பிளாக்  கூறியுள்ள உளவியல் ஆய்வுத் தகவல்கள் குற்ற உளவியல்துறையில் முக்கியமானவை.

கொலைக்குற்றவாளிகள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவியாக செயல்படும் நிறைய இளைஞர்கள் உண்டு. இவர்களுக்கு இப்படி உதவி செய்வதால் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. தனது ஆளுமை பலப்படுகிறது என நம்பி வழக்கில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். பனிரெண்டு தொடங்கு பதிமூன்று வயது வரையிலான சிறுவர்களை சோதனை செய்து உளவியல் வல்லுநர் டொனால்ட் அறிக்கை ஒன்றைத் தயாரித்தார். 

இந்த ஆய்வு குழந்தைகளுக்கான உளவியல் அறிக்கை என கூறப்படுகிறது. இதில் சிறுவர்களின் மூளையில் ஏற்படும் ஆளுமை செயல்பாடு மாற்றங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என டொனால்ட் கூறியிருந்தார். இப்படி ஆய்வு செய்ய 430 மாணவர்களைப் பயன்படுத்தினார். இந்த மாணவர்கள் அதீத செயல்பாடு, கவனக் குறைபாடு, அதீத கோபம் ஆகிய இயல்பு கொண்டவர்களாக இருந்தால் அவர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்.  திருடுவது, பொய் சொல்வது, வன்முறையான செயல்பாடு ஆகியவற்றை செய்பவர்கள் எதிர்காலத்தில் ஆபத்துக்குரியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை முறைகள் உண்டு. இவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படையான இயல்புகளாக ஐந்து விஷயங்கள் உண்டு.

 

சமூகரீதியான பழக்கம்

நேர்மறையான கொள்கைகள், எண்ணங்கள்

சீரான திட்டமிடல், கோபத்தை கட்டுப்படுத்தல்

உணர்வு ரீதியான அனுசரிப்பு தன்மை

புதிய செயல்பாடுகளை செய்தல், புதிய உணர்ச்சிகளை எதிர்கொள்ளல்

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்