ஸ்விட்சர்லாந்தின் அழகான இடம் - ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச்

 
















ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச்

அமைந்துள்ள இடம் – ஸ்விட்சர்லாந்து

யுனெஸ்கோ அங்கீகாரம் 2001

டிப்ஸ்

மலையேற்றம் செய்ய நினைத்துள்ளவர்கள், அனென்ஹட் எனும் இடத்திற்கு செல்லலாம். இங்கு நல்ல உணவும், மலைகளை பார்க்கும் கோணமும் சிறப்பாக அமைந்துள்ளது.

 

 

ஸ்விட்சர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைப்பகுதி. அரசால் பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பு 823 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய சிகரங்கள் என இரண்டைக் கூறலாம். ஒன்று, ஜங்க்ஃபிராவு மலைச்சிகரம். இதன் உயரம், 4,158 மீட்டர் ஆகும்.

ஃபின்ஸ்டெரா ஹார்ன் என்ற மலைச்சிகரம் இதை விட உயரமானது இங்கேயே அமைந்துள்ளது. ஆலெட்ஸ் மலைத்தொடர் இருபத்து மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது. பெரும்பாலும் இங்குள்ள மலைத்தொடர்களுக்கு வருபவர்கள் சாதாரண சுற்றுலா பயணிகள் அல்ல. பெரும்பாலும் மலையேற்ற வீரர்கள்தான் வருகிறார்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்த மலைப்பகுதி மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. பசுமையான புல்வெளி, பனி சூழ்ந்த மலைகள், மலையில் உள்ள ஏரிகள் என பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன.

மலையேற்ற வீரர்கள் ஜங்க்ஃபிராவு, மோன்ச் மலைப்பகுதிகளுக்கு செல்ல முடியும் என்பதல்ல. இங்கு சாதாரண சுற்றுலாப் பயணிகளும் செல்ல முடியும். இதற்கு அரசு ரயில்வே வசதி உள்ளது. ஐரோப்பாவில் அதிக உயரத்தில் அமைந்துள்ள ரயில் நிலையம் என்று இதைக் கூறலாம். 3,454 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரயிலில் நீங்கள் நிதானமாக இங்குள்ள பரப்பை நிதானமாக பார்த்தபடி பயணிக்கலாம். கேபிள்கார் வசதியும் உள்ளது. இவற்றின் மூலம் மூஸ் ஃபிலஃப், பெட்மெர்ஹார்ன், எக்கிஷோர்ன் ஆகிய இடங்களுக்கு சென்று காட்சியை ரசிக்கலாம்.

வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் ஹெரிடேஜ் சைட்ஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்