பெண்களைக் கொன்று உறுப்புகளை வெட்டித் தின்று மகிழ்ந்த மனிதர் - ஜோச்சிம் க்ரோல்
ஜோச்சிம்
க்ரோல், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் நிறைய
பெண்களை, சிறுமிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார். விசாரணையில்தான் ஒருவரை
மட்டுமே கொன்றதாக நேர்மையுடன் ஒத்துக்கொண்டார். ஆனால் அது உண்மையல்ல என்பதை அவரது வீட்டுக்குப்
போனதும் காவல்துறையினர் அறிந்துகொண்டனர். வீட்டில் காய்கறிகள் வேகவைத்துக்கொண்டிருக்கும்
பாத்திரத்தில் பெண்ணின் கை கிடந்தது. குளிர்பதனப் பெட்டியைத் திறந்தால் இறைச்சிதான் நிறைய பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
அசைவ விரும்பியோ என இறைச்சியை சோதித்தால் அத்தனையும் மனித உடலில் இருந்து வெட்டப்பட்ட
பாகங்கள், கறி சேமிக்கப்பட்டிருந்தன.
கழிவறையையும்
விடாமல் சோதித்தபோது அதில் மனித குடல்கள் மிதந்துகொண்டிருந்தன. அவற்றை சரியாக ஃபிளஷ்
செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் யார் என தேடினால் க்ரோல் மாட்டிக்கொண்டார். சிறுவயதில்
சிறு பொம்மைகளை வைத்து பாலுறவு தொடர்பான கற்பனையில் மிதந்தவர். தனக்கு அருகில் ஓடிய
விலங்குகளை கண்டந்துண்டமாக வெட்டியெறிந்தார். இந்த வகையில் அதிகம் அவரிடம் சிக்கியது
பன்றிகள்தான். பொம்மைகளை வாங்கி அவற்றை கத்தியால் குத்தி, கழுத்தை இறுக்கிப் பார்த்து
மனிதர்களை எப்படி கொல்வது என புரிந்துகொண்டார். தியரி முடிந்தவுடன் பிராக்டிக்கல்தானே.
அப்படித்தான் பெண்களை பார்த்தால் அவர்களை பின்னாடியே சென்று கொல்லத் தொடங்கினார். ஒருமுறை
ஏதோ ஒரு பெண் பிணத்தின் புட்டத்தை தட்டிப்பார்த்து தசையை வெட்டினார். அப்படி வெட்டுவது
அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான்கு வயது சிறுமி முதல் அனைத்து வயதிலும் பெண்களைத்
தேடி கொன்றார். உடல் உறுப்புகளை வெட்டி பதப்படுத்தி வைத்து இறைச்சி உண்ணும் தேவையை
தீர்த்துக்கொண்டார்.
என்னய்யா
இப்படி மனுசனோடு கைவிரலை வேகவைச்சுட்டிருக்கே என்ற ஜெர்மனி காவல்துறை கேட்டபோது, இங்கே
இறைச்சி விலை அதிகம்யா. அதனால்தான் நானே இறைச்சியை தயாரிச்சுக்கிறேன் என கோடை வானொலி நேயர் போல பேசியது யாருக்கும் பகீரென்றுதானே
இருக்கும்.
1.1
ஒருவர் உடலுறவு
சார்ந்து மனதளவில் உடல் அளவில் அடிமையாவதை பாரபிலிலியாஸ் என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி குறைபாடு உள்ளவர்கள் ஒரே மாதிரியான இன்பம் அனுபவிக்கும் கற்பனையை தொடர்ச்சியாக
செய்துகொண்டே இருப்பார்கள். சிறு வயதில் ஏற்படும்
இந்த மன உணர்வை அவர்கள் மருத்துவரிடம் சொல்லி
சிகிச்சை பெறமாட்டார்கள். இதனால் தனக்கு அவமானம் ஏற்படும் என நினைப்பார்கள். ஆனால்
அது வயது வரும் பருவத்தில் வளர்ந்து சமூகத்திற்கான தீமையாக முடியும். பாரபிலியாஸ் என்பது
பெரும்பாலும் ஆண்களை பாதிக்கும் குறைபாடு.
இதிலுள்ள
வகைகளைப் பார்ப்போம்.
ஃபெட்டிஷம்
காலணிகள்,
மெழுகுவர்த்தி, கயிறு, உள்ளாடைகள் ஆகியவற்றின் மீது ஆசை கொண்டு சேகரித்து வைப்பது.
ஆதாமிசம்
நிர்வாணமாக
இருப்பதற்கு விரும்புவது
எக்ஷிபிசினிசம்
தனது குறியை
அல்லது பிறப்புறுப்பை பிறருக்கு காட்ட ஆசை கொள்வது
ஆட்டோ எரோடிசம்
பாலியல் ரீதியான
தன்னை ஒருவர் தீர்மானித்துக்கொண்டு செயல்படுவது
ஃபிராட்டியூரிசம்
பொதுஇடங்களில்
ஆண், பெண், திருநங்கையினரை தொட்டு தடவி பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்வது.
டெலிபோன்
ஸ்கேட்டாலஜி
அறிமுகமில்லாதவர்களிடம்
போன் செய்து அழைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்பது.
பெடோபிலியா-
ஹெபேபிலியா
சிறுவர்களிடம்
உடலுறவு கொள்வது பெடோபிலியா எனலாம். இதில் ஆபாச தளங்களைப் பார்த்துவிட்டு ஒருவரை தாக்கி
உடலுறவு கொள்வது உள்ளடங்கும். ஹெபேபிலியா சிறுமிகளிடம் தாக்கி மிரட்டி உடலுறவு கொள்வதைக்
குறிக்கும்.
நெக்ரோபிலியா
– இறந்த பிணங்களை உடலுறவு கொண்டு மகிழ்ச்சிபெறுவது
மாசோசிசம்
பிடிஎஸ்எம்
முறையில் ஒன்று. அடிப்பது, உதைப்பது, கத்தியால் வெட்டுவது, கீறுவது ஆகியவற்றை செய்து
உடலுறவு இன்பத்தை அதிகரிக்கச் செய்வது..
நெக்ரோஃபெட்டிஷம்
பிணங்கள்
சூழ வாழ்வது. அவற்றுடன் உடலுறவு கொள்வது…
பார்சியலிசம்
ஒருவரின்
உடல் உறுப்புகளை வெட்டி குறிப்பாக, கால், மார்பகம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு உடலுறவு
அல்லது சுய இன்பம் செய்வது
பிக்குயிரிசம்
கத்தியால்
ஒருவரைக் குத்தி அதன் மூலம் பாலியல் இன்பம் பெறுவது
பிக்மாலியனிசம்
சிலை அல்லது
பொம்மை மூலம் உடலுறவு இன்பம் பெறுவது
ஜூபிலியா-
விலங்குகளைப் பயன்படுத்தி உடலுறவு இன்பம் பெறுவது
அபோடெம்ன்னோபிலியா
வெட்டியெடுக்கப்பட்ட
ஒருவரின் உடல் உறுப்புகளைப் பார்த்து பாலியல் பரவசம் கொள்வது.
காப்ரோபிலியா
மலத்தை, சிறுநீரை
பார்த்து முகர்ந்து பாலியல் இன்பம் பெறுவது
உரோபிலியா
சிறுநீரைப்
பார்த்து உச்சகட்ட இன்பம் அடைவது
கிலிஸ்மாபிலியா
ஒருவருக்கு
இனிமா கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி பெறுவது
சாடிசம்
வசைபாடுவது,
அடிப்பது, நெருப்பிட்டு பொசுக்குவது, கத்தியால் குத்துவது, கழுத்தை நெரிப்பது, கொல்வது
ஆகியவை இதில் அடங்கும்.
ஜெரோன்டோபிலியா
தனக்கு எதிரான
பாலினத்தில் வயதான நபர்களைப் பார்த்து பாலியல் இன்பத்தில் ஈடுபடுவது.
இன்ஃபைபுலேஷன்
தன்னைத்தானே
சித்திரவதை செய்து மகிழ்வது.
டிரான்ஸ்வெட்டிசம்
எதிர்பாலினம்
போல உடை அணிந்து பாலியல் மகிழ்ச்சி பெறுவது.
டிரோலிசம்
ஒருவர் ஏராளமானோருடன்
பாலியல் உறவு வைத்து மகிழ்ந்திருக்கும் நிலை.
லைகான்த்ரோபி
ஒருவர் தன்னை
ஓநாயாக நினைத்து நடந்துகொள்வது
வாம்பயரிசம்
பிறரைக் கொன்று ரத்தம் குடித்து மகிழும் மனநிலை
ஸ்காப்டோபிலியா
ஒருவர் ஆடையின்றி
இருப்பதை அல்லது தூங்குவதை ஜன்னலில் இருந்து வேடிக்கை பார்ப்பது. பிறர் உடலுறவு கொள்வதை
அவர்களுக்குத் தெரியாமல் பார்த்து இன்புறுவது.
ஃபயர் வாட்டர்
காம்ப்ளெக்ஸ்
நெருப்பை
எரிவதைப் பார்த்தால் ஒருவருக்கு சிறுநீர் கழிக்கத் தோன்றும் நிலை.
கருத்துகள்
கருத்துரையிடுக