இடுகைகள்

அபாகஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அபாகஸ் மூலம் கணிதம் வளருமா? - ஜப்பானில் புதிய முயற்சி!

படம்
கணிதத்தில் வெல்ல அபாகஸ் பயிற்சி! ஜப்பான் மாணவர்கள் தேசிய அளவிலான கணிதப்போட்டிகளில் வெற்றிபெற அபாகஸ் பயிற்சியை செய்து வருகின்றனர். உலகம் முழுக்கவே கணிதம் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் மரபான பல்வேறு கணிதப்பயிற்சிகளை கைவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் அபாகஸ். இதனை இன்னும் ஜப்பான் மாணவர்கள் கைவிடாமல் பயின்று வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கணிதப்போட்டியில் அபாகஸ் பயிற்சியின் திறன் உணரப்பட்டது. போட்டியில் கேட்கப்பட்ட கணிதக்கேள்வி ஒன்றுக்கு விடை ட்ரில்லியனில் வந்தது. இதனைக் கணினி, கால்குலேட்டர் எனத் தேடி எழுதுவதில்  தடுமாற்றம் இருந்தது. அப்போது அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் எளிதாக விடை கண்டுபிடித்து எழுதினர்.  ஜப்பானில் 1970 ஆம்ஆண்டு கற்றுத்தரப்பட்ட அடிப்படை கணிதப் பயிற்சி அபாகஸ். பின்னர் அரசுப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனைக் கற்றுவருகின்றனர். கூடுதலாக, கணிதத் திறனுக்கான பயிற்சியாக அபாகஸ் மாறிவிட்டது. ஜப்பானில் அபாகஸை சோரபன் (Soroban) என்று குறிப்பிடுகின

நாம் கண்காணிக்கப்படுகிறோமா?

படம்
நிச்சயமா என்கிறார் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாயா வாங். இவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் பணிபுரிகிறார். மக்கள் முகத்தை ஸ்கேனிங் செய்யும் கருவி மட்டும்தான் தம்மைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில், மால்களில் நிறுவியுள்ள பாதுகாப்பு கதவுகள் கூட உங்களைப்ப ற்றிய  தகவல்களை சேகரித்து வருகின்றன என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறார். சீனா தற்போது உலகிலேயே மிகப்பெரியளவிலான வீடியோ கண்காணிப்பு அமைப்பை உருவாக்கிவிட்டது. அரசுக்கு எதிராக சுண்டுவிரலை அசைத்தால் கூட சாலை, விமானநிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் உங்கள் முகம் ஒளிபரப்பாகத் தொடங்கிவிடும். செலிபிரிட்டியாக அல்ல தேடப்படும் குற்றவாளியாக.  கூகுள் எப்படி தன் சேவைகளை இலவசமாக கொடுத்து பயனர்களின் தகவல்களை சேகரித்து விளம்பரங்களை அளித்து காசு பார்க்கிறதோ இதுவும் அதேபால்தான். போனின் ஐஎம்இஐ எண், வைஃபை முகவரி ஆகியவை அனைத்தைப் பயன்படுத்தியும் மக்களை பின்தொடர்ந்து உளவு பார்க்க முடியும் என்கிறது பிங்டெக் நிறுவனம்.  பீஜிங்கில் உள்ள ஸ்மார்ட் சிட்டியில் இந்த வகை தகவல் கொள்ளை நடை