இடுகைகள்

தலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்களுக்கு தலை நடுவிலிருந்து வழுக்கையாவது ஏன்? மிஸ்டர் ரோனி

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி பதில் சொல்லும்போது தலையை சொறிவது ஏன்? இயல்பாகவே இரண்டு வாய்ப்புகளை கொடுத்து இரண்டில் ஒன்று என்றால் பலரும் எதை தேர்ந்தெடுப்பது என தலையை சொறிவார்கள். அது இயல்பானதுதான். இதனை உயிரியலில் டிஸ்பிளேஸ்மென்ட் ஆக்டிவிட்டி என்று கூறுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டும் இந்த பழக்கம் இல்லை பறவைகளுக்கும் கூட உண்டு. பறவை ஆபத்தான சூழலில் தாக்கவா, ஓடிவிடவா என இரு வாய்ப்புகள் உள்ள நிலையில் பதற்றத்துடன் தரையை கொத்துகிறது.  பதற்றத்தில் இருக்கும்போது யோசிக்கிற போஸில் உள்ளதால் அதன் பதற்றம் கூட தணிகிறது என நினைக்க வாய்ப்புள்ளது. 2017இல் செய்த ஆய்வில் மக்காவ் வகை குரங்குகள் இப்படி ஏதேனும் தீவிர யோசனையில் தலையை சாய்த்து சொறிந்துகொண்டிருக்கிற குரங்கை அணுக பயந்து நின்றிருக்கின்றன. அது யோசிக்கிற நிலையில் அதனை தாக்குவது தவறு என்பதை அதன் சொறிகிற பாவனை ஏற்படுத்தியிருகிறது. தலையை சொறிகிற பழக்கம் அப்படியே பாரம்பரியமாக நமது உடலுக்குள் பொதிந்து வந்திருக்கிறது என்று கூறலாம்.  மீன்களால் தன்னை உணர முடியுமா? முடியாது. ஆனால் முகரும் சக்தியால் பிற மீன் இனங்களை அடையாளம் அறிய முடியும். தன்னுடைய

தலையில்லாத கோழி வாழுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி கோழி தலையில்லாமல் எத்தனை நாட்கள் வாழும்? 1940 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மைக் என்ற கோழி தலையின்றி பதினெட்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தது. கோடாரியால் தலை வெட்டப்பட்ட  கோழி இது. தாய்லாந்தில் மார்ச் 2018 ஆம் ஆண்டு, இதுபோல கோழி ஒன்று வாழ்வதாக பதிவு உள்ளது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் உண்டு. தலையில்லாமல் வாழ்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் தலை வெட்டப்பட்டபிறகு ரத்தம் அதிகம் வீணாகி விடும். எனவே கோழி உயிர்பிழைப்பது மிக கடினம். பாதுகாக்கப்பட்ட சூழலில் இது சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக ஆய்வகம்.