தலையில்லாத கோழி வாழுமா?
பிபிசி |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
கோழி தலையில்லாமல் எத்தனை நாட்கள் வாழும்?
1940 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மைக் என்ற கோழி தலையின்றி பதினெட்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தது. கோடாரியால் தலை வெட்டப்பட்ட கோழி இது.
தாய்லாந்தில் மார்ச் 2018 ஆம் ஆண்டு, இதுபோல கோழி ஒன்று வாழ்வதாக பதிவு உள்ளது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் உண்டு. தலையில்லாமல் வாழ்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் தலை வெட்டப்பட்டபிறகு ரத்தம் அதிகம் வீணாகி விடும். எனவே கோழி உயிர்பிழைப்பது மிக கடினம். பாதுகாக்கப்பட்ட சூழலில் இது சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக ஆய்வகம்.