சைக்கோ கொலைகாரர்கள் - 3 (நிலமெங்கும் ரத்தம்)




Add caption


சைக்கோ கொலைகாரர்கள் 3



ரேணுகா ஷிண்டே - சீமா கவிட்

ரேணு - சீமா இருவருமே தாய் அஞ்சனாபாயினால் திருட்டு பழகினர். பின்னர் குழந்தைகளை வைத்து திருடினர், ஏதாவது இடத்தில் சிக்கினாலும் தப்பிக்க கேடயம் குழந்தைகள்தான். இதற்காகவே குழந்தைகளை கடத்த தொடங்கினார்கள். சிக்கல் அங்குதான் உருவானது. 1990 - 96 முதல் ஆறு குழந்தைகளை போட்டுத்தள்ளினர். ஏம்மா கொன்னீங்க என்று கேட்டதற்கு, எத்தனைப் பேரை கொன்றோம் என எண்ணிக்கை தெரியவில்லை என கைகளின் அத்தனை விரல்களையும் விரித்தனர் கொலைகார சகோதரிகள்.தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்.

தக் பேஹ்ராம்


1840 ஆம்ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட கொள்ளையர். மத்திய இந்தியா வரையில் பயணித்த இக்கொள்ளையரின் ஒரே ஹாபி, வழியில் உள்ள பயணிகளை கர்ச்சீப்பினால் கழுத்தை இறுக்கி நொடியில் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடிப்பது. இப்படி கொன்றவர்களின் எண்ணிக்கை 931(1790-1840). ஆனால் இவர் ஒப்புக்கொண்டது 125 மட்டுமே. கிளாசிக் கொலைகாரர் என சொன்னால் இவரைத்தான் சொல்லவேண்டும்.


ராஜேந்திர ஜாக்கல், திலிப் சுதார். சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தப், முனாவர் ஹருன் ஷா
நாங்க நாலு பேரு, பயம்னா என்னன்னே தெரியாது என்று சொல்வார்களே அது இவர்களுக்குப் பொருந்தும். அபினவ் கலா மகாவித்யாலயாவைச் சேர்ந்தவர்களான இவர்கள் பத்து பேர்களை போட்டுத்தள்ளி க்ரைம் லிஸ்டில் முன்னேறினர். 1983 ஆம் ஆண்டு கைதானவர்கள், தூக்கிலிடப்பட்டனர். இதை மையமாக வைத்துத்தான் அனுராக் காஷ்யப் பான்ச் என்ற படத்தை எடுத்தார். 
அக்கு யாதவ்
கர்மா என்ன செய்யும் என்றால் தயங்காமல் அக்கு யாதவைக் கைகாட்டலாம்.  கண்ணில் படும் பெண்களை யோசிக்காமல் கற்பழித்து கொன்றவர், உள்ளூர் டன்டனக்கா டான். காலம் சதிசெய்ய போலீஸ் கைது செய்தது. நாக்பூர் கோர்ட்டில் மக்கள் கூட்டம் யாதவை அடித்தே கொன்றது இவரின் கொடூரங்களுக்கு சரியான சாட்சி. இவரின் ஆண்குறியை பெண் ஒருவர் வெட்டி எடுத்தது ஏ சர்ட்டிபிகேட் திரைப்படமாக அங்கு கூடிய மக்களின் கண்களில் ஓடியது. மக்களின் ஆக்ரோஷத்தை போலீஸ் கைகட்டி வாய் பொத்தி பார்த்தது. பின்னே உசுரு பயம் யாருக்கும் வருமே!
ராமன் ராகவ்
அனுராக் காஷ்யப் இப்பெயரில் நவாசுதீன் சித்திக்கை வைத்து படமே எடுத்துவிட்டார். அதே தொடர் கொலைகாரர்தான். மும்பை குடிசைவாசிகளை மிரட்டிய கொலைகாரர் ராமன் ராகவ். 1960 ஆம் ஆண்டு சிசோபெரெனியா நோய் பாதித்தவர் என போலீஸ் காரணம் சொல்லியது. 23 பேர்களை கொன்றார் என்பது தோராயக் கணக்கு. 1995 ஆம் ஆண்டு கிட்னி செயலிழந்ததால் நிறைய உயிர்கள் பிழைத்தன. 
பீர் கொலைகாரர்
மும்பையில் 2006 முதல் 2007 வரை ஆறுபேர் கொலையாகி கிடந்தனர். கொலையான அத்தனை பேர்களுக்கும் ஒரே ஒற்றுமை, அவர்களின் அருகில் பீர் கேன்கள் கிடந்தது.  2008 ஆம் ஆண்டு ரவீந்திர கன்ட்ரோலே என்பவரை, கைது செய்தனர். காரணம், அடுத்த நிகழ்ந்த இரண்டு பீர் மரணங்களும் அவரைக் கைகாட்டின. 2009 ஆம் ஆண்டு ரவீந்திரா, வழக்குகளிலிருந்து விடுதலை ஆனார். இப்போது மும்பையில் ஜம்மென ஓட்டல் வைத்து செட்டில் ஆகிவிட்டார் ரவீந்திரா. பீர்கொலை மர்மம் இன்றும் தீரவில்லை. 
தொகுப்பு: பொன்னையன் சேகர்