நவீன பாதுகாப்பு அம்சங்கள் - 2019
நவீன பாதுகாப்பு அம்சங்கள் அவசியமா?
முன்புபோல வங்கியை கிரில் கதவுகள் போட்டு காப்பாற்ற முடியாது. ஏனென்றால் இணைய வாசல் மூலம் தேட்டை போட்டுவிட்டு ஓடிவிடுகிறது தொழிலதிபர் கூட்டம். அதற்கு கமிஷன் வாங்கிக்கொண்டு அனுமதிக்கிறது மக்கள் பிரதிநிதிகளின் கும்பல். இந்த லட்சணத்தில் நாம் யாரை நம்புவது? ஆம் வேறு வழியே இல்லை. தொழில்நுட்பத்தைத்தான் நம்பியாக வேண்டும்.
அமேசான் இகோ
இதுவும் பயனர் பற்றிய பல்வேறு தகவல்களை அசைபோட்டு அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுதான். ஆனால் தனிநபரின் தகவல்களை அரசே கேட்டாலும் தராது என்பதுதான் இதன் பிளஸ். கொலை குற்றம் தொடர்பான வழக்கில், குற்றவாளியைக் கண்டறிய இவர்கள் உதவியுள்ளது விதிவிலக்கானது.
இதேபோல ஆப்பிள் தனது பாதுகாப்பு வசதிகளை உடைக்க முடியாது என எஃப்பிஐயிடம் போராடியது நினைவுக்கு வருகிறதா?
பிலிப்ஸ் அவென்ட் - குழந்தைகளை கண்காணிக்கும் கருவி
சில வக்கிரம் பிடித்தவர்கள் குழந்தைகளைக் கண்காணிக்கும் கருவியின் வீடியோவையும் இணையத்தில் வெளியிடத் தயங்குவதில்லை. வைஃபையில் இணைந்தாலும் இதனை எளிதாக ஹேக் செய்யமுடியாது என்கிறது பிலிப்ஸ் நிறுவனம்.
டார்க்மேட்டர் காட்டிம்
காட்டிம் என்றால் அரபு மொழியில் அமைதி என்று அர்த்தம். ஷீல்டு மோடு என்ற ஆப்சனைப் பயன்படுத்தினால் கேமரா, மைக்ரோபோன் என அனைத்துக்குமான மின்சாரத்தை நிறுத்தி அமைதி காக்கும் ஒரே போன் இதுவே.
ஆசுஸ் வயர்லெஸ் ரூட்டர்.
இப்போது சந்தையில் கிடைக்கும் பொருட்களில் மிகவும் பாதுகாப்பான ரூட்டர்களில் இது முக்கியமானது. இதில் பலவீனமான பகுதி, தானியங்கி கடவுச்சொல் கிடையாது என்பதே. ஆனால் நீங்கள் குஜால் சைட்டுகளை சென்றாலும் பாதுகாப்பு பிரச்னை என்றால் உடனே கேட்டைப் போட்டு தடுத்து உங்களை வேதாளரின் டெவில் நாய் போல காக்கும்.
நன்றி: பிபிபி