மோட்டரோலா ரேசர் வி4!






மோட்டரோலாவின் அடுத்த போனாக ரேசர் வி4 என்ற போன் வரவிருக்கிறது. இதன் வடிவமைப்பு குறித்த புகைப்படங்கள் சீன இணையதளங்களில் கசிந்துள்ளன.

சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு என்ற போனுக்கு போட்டி என இதைக்கூறலாம். அந்த போனைவிட இது பாக்கெட்டில் எளிதாக வைத்துக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


2004 ஆம் ஆண்டே வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட போன் இது. வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை இதன் விலை 1500 டாலர்களாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.


மோட்டரோலா போன் வெளியிட இது சரியான சந்தர்ப்பம் அல்ல என டெக் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் இப்போதுதான் சாம்சங், மடிக்கும் டேப்லட் வெளியிட்டனர். ஆனால் அதில் சிக்கல்கள் ஏற்பட மேம்படுத்தி வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.

நன்றி: ஃப்யூச்சரிசம்

பிரபலமான இடுகைகள்