இடுகைகள்

வேதியியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய கழிவுப்பொருட்களிலிருந்து காகிதம் செய்யலாம்! - சுபாம் சிங், வேதியியல் பொறியாளர்

படம்
  விவசாய கழிவுகளிலிருந்து அற்புத பொருட்கள்! மகாராஷ்டிரத்தின் புனே நகரைச் சேர்ந்தவர், சுபாம் சிங். இவர் கிரேஸ்ட்(Craste) எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயக் கழிவுகளைப் பெற்று அதை பேக்கேஜிங் பொருட்களாக, மேசைகளாக மாற்றி வருகின்றது.  இந்தியாவில் ஆண்டுதோறும் 80 டன்கள் விவசாயக் கழிவுகள் நெருப்பிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது. இப்பிரச்னையைத் தீர்க்கவே கிரேஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. வேதிப்பொறியியல் படித்தவரான சுபம் சிங், சில ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து விவசாய கழிவுகளில் இருந்து மேசை, நாற்காலிகளை செய்யத் தொடங்கினார். இவற்றில் மிஞ்சும் கழிவுகளை விவசாய நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம். இவரது ஆராய்ச்சியைப் பார்த்த புது டில்லியியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான பைராக் (BIRAC) கிரேஸ்ட் நிறுவனத்தைத் தொடங்க நிதியுதவியை அளித்தது.   ”சர்க்குலர் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயக்கழிவுகளை பல்வேறு பொருட்களாக மாற்றுகிறோம். இந்தியா மரப்பொருட்களுக்கு சீனா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை நம்பியுள்ளது. ஆனால், விவசாய பொருட்களிலிருந்து மேசை,

செரிமானத்தின் வேதியியல் பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர் - வில்லியம் குஹ்னே

படம்
  வில்ஹெம் குஹ்னே ( wilhelm kuhne) வில்ஹெம், 1837ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.  கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் வேதியியல், உடல் அமைப்பு, நரம்பியல் பற்றிய பாடங்களைப் படித்து தேறினார். பட்டதாரியான பிறகு தவளையில் ஏற்படும் நீரிழிவு பற்றி செய்த ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றார்.  ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்து உடலியல் பற்றிய பாடங்களைக் கற்றார். 1871ஆம் ஆண்டு ஹெய்டெல்பர்க் பல்கலையின் தலைவராக ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதவியேற்கும் முன்னரே, வில்ஹெம் உடலியல் பாடங்களைக் கற்றுவிட்டார். இப்பல்கலையில் வில்ஹெம் சேர்ந்தபிறகு, தசைகள், நரம்புகள் பற்றி கவனம் எடுத்து படித்தார். குறிப்பாக கண் நரம்புகள்.  கூடுதலாக, செரிமானத்தின் வேதியியல் பற்றியும் ஆய்வுகளைச் செய்தார். இதில்தான் ட்ரைப்ஸின் எனும் புரத என்சைம் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1899ஆம் ஆண்டு தனது பணி ஓய்வுக்குப் பிறகும் பல்கலையில்தான் இருந்தார். அடுத்த ஆண்டு அந்நகரில் காலமானார்.  the biology book big ideas simply explained book

தெரிஞ்சுக்கோ - தனிமவரிசை அட்டவணை!

படம்
உலகில் பல்வேறு பொருட்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் என்ன? இந்து மதத்தில் பஞ்சபூதங்கள்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பார்கள். அதனை கிரேக்க ஆராய்ச்சியாளர்களும் கூட நம்பினார்கள். நிலம், நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவைதான் அவை. இவற்றை உருவாக்க தேவையான பொருட்களும் உண்டுதானே? அவை இயற்கையில் பல்வேறு பொருட்களின் பகுதிப் பொருட்களாக உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து வரிசைப்படுத்தி உள்ளனர். அவற்றைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். 1869ஆம் ஆண்டு டிமிட்ரி மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியபோது அதில் இருந்த தனிமங்களின் எண்ணிக்கை 63. இன்று அந்த எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. இதில் உள்ள தனிமங்களில் 94 தனிமங்கள் இயற்கையாகவே பூமியில் கிடைக்கின்றன. தனிம வரிசை அட்டவணையில் மனிதர்கள் உருவாக்கிய தனிமங்களாக 24 உள்ளன. அட்டவணையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தனிமங்கள் மனிதர்களின் உடலிலேயே உள்ளன. ஸ்மார்போனில் 70க்கும் மேற்பட்ட தனிமங்கள் உள்ளன. உலகில் 75 சதவீத ஹைட்ரஜன் நிறைந்துள்ளது. நன்றி - க்வார்ட்ஸ்

சோதனைகளுக்கான சரியான நூல்!

படம்
வண்ண வண்ணச் சோதனைகள் பேரா. பி.கே . ரவீந்திரன் தமிழில் பேரா. பி.ஆர். ரமணி  அறிவியல் வெளியீடு விலை. ரூ. 25  மாணவர்களுக்கு தியரிகளை விட சிக்கலானதாக உள்ளது சோதனைச் சாலைகளில் செய்யும் சோதனைகள்தான். வேதிப்பொருட்களின் தன்மைகளை முழுமையாக அறிந்தால்தான் அதனை எப்படி பயன்படுத்துவது என புரிந்துகொள்ள முடியும். இந்த நூலில் ஆசிரியர் ரவீந்திரன் அதனை எளிமையாக வகுப்பறையில் நடப்பது போல எழுதியுள்ளார். படிக்கவும் புரிந்துகொள்ளவும் இது எளிமையாக உள்ளது. பள்ளிகளுக்கு வழங்குவதற்கான சரியான நூல்.  நன்றி - பாலகிருஷ்ணன்