இடுகைகள்

நாட்டு மரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கைச் சூழலைக் காக்க வேகமாக உருவாக்கப்படும் மியாவகி காடுகள்!

படம்
  நகரங்களில் பெருகும் மியாவகி காடுகள்! பெருநகரங்களில் இயற்கையான காடுகளை உருவாக்க  அதிக நிலப்பரப்பு தேவை. இப்பிரச்னையைத் தீர்க்க மியாவகி காடுகள் உதவுகின்றன. 1970ஆம் ஆண்டு ஜப்பானிய உயிரியலாளர் அகிரா மியாவகி(Akira Miyawaki), மரக்கன்றுகள், புற்கள், புதர் தாவரங்களை இணைத்து வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.  மியாவகி முறையில், தாவரங்கள் நெருக்கமாக நடப்படுவதால், வெளிச்சத்திற்கு போட்டிபோட்டு வளர்கின்றன. இதன்மூலம்,பெருநகரங்களில் சிறு காடுகளை வேகமாக உருவாக்கலாம். அகிரா, தன் வாழ்நாளில்  பல்வேறு நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட சிறு காடுகளை உருவாக்கியுள்ளார்.  இந்தியாவில், ஹைதராபாத் நகரில் பிரமாண்டமாக 10 ஏக்கரில் மியாவகி காடு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெருநகர மாநகராட்சி 1,000 மியாவகி காடுகளை உருவாக்க திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில், மண்ணுக்குப் பொருத்தமான தாவரங்கள், மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுப்பதே இலக்காக உள்ளது.  பிற முறைகளை விட மியாவகி முறையில் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. இதை யாரும் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்கிறது அஃபாரஸ்ட் சூழல் அமைப்பு. இந்த அமைப்பின் நிறுவனரான சு