இடுகைகள்

கிளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெக்டொனால்டை உலகம் முழுக்க கொண்டு சென்ற ரே கிராக்! - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
              சூப்பர் பிஸினஸ்மேன் ரே கிராக்   இன்று உலகம் முழுக்க துரித உணவுகளுக்கு அடையாளமாக இருப்பது மெக்டொனால்ட் கடைகள்தான் . சாண்ட்விட்ச் , பர்கர் , பிரெஞ்ச் பிரைஸ் என விதவிதமாக விற்று வரும் இந்த கடைகளை உருவாக்கியவர் ரே கிராக் . இவர் அமெரிக்காவில் 1902 ஆம் ஆண்டு பிறந்தவர் . தனது கடைகளுக்கான சிந்தனையை இவர் பெற்றபோது வயது 50 ஆகியிருந்தது . பலரும் வேலை செய்து களைத்து ஓய்வெடுக்கலாமா என்று யோசிக்கும் வயது . அப்போதுதான் மெக்டொனால்ட் உணவக ஐடியாவை பிடித்திருக்கிறார் ரே கிராக் . 1917 ஆம் ஆண்டு தனது வயதை மறைத்து உலகப்போரில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்தார் . பிறகு , காகித பொருட்களில் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்தார் . எர்ல் பிரின்ஸ் என்பவர் , மில்க்‌ஷேக்குகளை ஒன்றாக கலக்கும் மெஷினை உருவாக்கினார் . இதனை வணிகத்திற்கான வாய்ப்பாக ரே கிராக் பார்த்தார் . நாடெங்கும் சென்று பல்வேறு உணவகங்கள் , பார்மசிகளில் மெஷின்களை விற்றார் . ஆனாலும் கூடன 1950 இல் இந்த மெஷின்களின் விற்பனை சரிந்துபோனது . ரே கிராக்கினுடையது , ஐந்து மில்க்‌ஷேக்குகளை ஒரே நேரத