இடுகைகள்

கிராம போன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவப்பு இறைச்சியில் கசியும் திரவம், கிராமபோன் கண்டுபிடிப்பாளர், ராட்சஷ சிலந்தி - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
        மாட்டிறைச்சியில் இருந்து வெளியாகும் சிவப்பு நிற திரவத்தின் பெயர் என்ன? மாட்டிறைச்சியை வெட்டி வைத்த பிறகு அதிலிருந்து மெல்லிய சிவப்பு நிறத்தில் திரவம் ஒன்று கசியும். அது ரத்தமோ என பலரும் பதற்றமடைகிறார்கள். அது ரத்தமல்ல. அதன் பெயர் மையோகுளோபின். இது நீரில் கரையக்கூடியது. இந்த வேதி திரவம், உடலில் உள்ள ஆக்சிஜனை தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும் வேலையை செய்கிறது. ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு, நான்கு ஆக்சிஜன் மூலக்கூறுகளை கவர்ந்திழுத்து சேமித்துக்கொள்கிறது. ஆனால் மையோகுளோபின் மூலக்கூறு, ஒற்றை ஆக்சிஜன் மூலக்கூறை மட்டுமே சேமிக்கிறது. இரண்டின் பணிகளைப் பார்ப்போம். ஹீமோகுளோபின், உடல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. ஆனால், மையோகுளோபின் தற்காலிகமாக ஆக்சிஜனை சேகரித்து வைத்துக்கொள்கிறது. கடலில் உள்ள உயிரினங்களான திமிங்கலம், சீல் ஆகியவற்றின் உடலில் மையோகுளோபின் அதிகளவில் காணப்படுகிறது. இவை. மூச்சு விடுவதற்காக சிலமுறை மட்டுமே நீரின் மேற்பரப்பிற்கு வரும். மற்ற நேரங்களில் மையோகுளோபின் சேகரிப்பு உதவுகிறது. பிட்ஸ் சிவப்பு இறைச்சியை ஒருவர் சமைக்கும்போது, அதன் சிவப்பு நிறம் ...

வீட்டின் ஹாலில் இருக்கவேண்டிய பொருட்கள்! - ஹெட்செட், புரஜெக்டர், ஐபேட் புரோ, ஸ்பீக்கர்

படம்
  ரேஷர் பிளாக் ஷார்க் வி2 கேமிங் ஹெட்செட் கம்ப்யூட்டர், கன்சோல் என இரண்டிலும் இந்த ஹெட்செட்டைப் பயன்படுத்தலாம். நீண்ட நேர விளையாட்டுக்கும் ஏற்றதாக ஹெட்செட் உள்ளது. ஒலியின் தரமும், மைக்கும் கூட சிறப்பாக இயங்குகிறது.  விலை 9,000 எப்சன் இஹெச் டி டபிள்யூ 7100 4 கே புரஜெக்டர். இதனை வீட்டிலயே  பொருத்தி நோய்த்தொற்று பாதிப்பில்லாமல் படங்களைப் பார்க்கலாம். இந்த புரஜெக்டர் இருந்தால் உங்கள் தலைக்கு பின்னே சோளப்பொரியை கறுக் முறுக் என சாப்பிடும் சத்தம் இருக்காது. யாரும் போனை நோண்டிக்கொண்டு படம் பார்க்கும் அனுபவத்தை கெடுக்க மாட்டார்கள். ப்ளூடூத் வசதி இருப்பதால் எளிதாக ஸ்பீக்கர்களில் பொருத்தி பாடலை படத்தை ரசிக்கலாம். இதில் வெளிவரும் ஒளியும் சிறப்பாக இருப்பதால், இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறோமே என்ற பயமும் வராது.  விலை 1,599 சோனி பிஎஸ் எல்எக்ஸ் 310பிடி ப்ளூடூத் டர்ன்டேபிள் நீங்கள் கிராம போனில் பாட்டு கேட்கும் ஆள் என்றால், இந்த பொருள் உங்களுக்கானதுதான். சோனியின் இந்த தயாரிப்பு கொஞ்சம் நவீனமானது.  ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஹெட்போன் எதனுடனும் இணைத்துக்கொள்ளலாம். ரிலாக்சாக படுத...