இடுகைகள்

ரத்த தானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்தவங்கிகளுக்கு இல்லாத ஒருங்கிணைப்பு - பறிபோகும் உயிர்கள்

படம்
pixabay பொதுவாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகம். டைகர் பிஸ்கெட் பாக்கெட்டிற்காக அல்ல, உண்மையாக நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதம் தமிழர்களுக்கு உண்டு. இதனால் ரத்ததான முகாம் நடக்கும்போது மக்கள் பங்கேற்று ரத்ததானம்  செய்கிறார்கள். ஆனால் இந்த ரத்தம் முறைப்படி மக்களுக்கு வழங்கப்படுகிறா? அனைத்து மருத்துவமனைகளில் ரத்தவங்கி இருக்கின்றன. செயல்படுகின்றன. ஆனால் தேவையானவர்களுக்கு அது பயன்படுவதில்லை. குறிப்பிட்ட ரத்த வகை தேவை எனும்போது நீங்கள் ரத்தம் கொடுத்துவிட்டு அந்த ரத்த வகையை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் தேடும் ரத்த வகை இருக்காது. எனவே பிற மருத்துவமனைகளை நோயாளிகளின் உறவினர்கள் தேடி ஓடுவது நடைபெறுகிறது. இதற்கு காரணம், மருத்துவமனைகளில் சரியான ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு இல்லாததே காரணம். ரத்தத்தை மாடர்ன் பிரெட் போல ஆறுமாதத்திற்கு அப்படியே வைத்திருந்து பயன்படுத்த முடியாத நடைமுறைப் பிரச்னை வேறு இருக்கிறது. 2016-17 ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் யூனிட் ரத்தத்திற்கு தேவை இருக்கிறது. இதனை பற்றாக்குறை என்றும் சொல்லலாம். இத

அரிதினும் அரிய ரத்தம்! - எப்பிரிவு தெரியுமா?

படம்
அரிதினும் அரிய ரத்த வகைகள்! ரத்த வகைகளை பொதுவாக நீங்களே அறிவீர்கள். ஏ, பி, ஓ, ஏ பாசிட்டிவ், பி பாசிட்டிவ்,  நெகட்டிவ் என குறிப்பிடுவார்கள். இதனைக் கூற இதிலுள்ள ஆன்டிஜென் விஷயங்கள்தான் காரணம். ரத்த செல்களின் மேல் கோட்டிங்காக இருப்பதுதான் ஆன்டிஜென்கள். இதில் ஏ,பி முதன்மையானவை. இதில் ரீசஸ் டி எனும் ஆன்டிஜென் அதிகம், குறைவு என்பது மட்டுமே கணக்கில் கொண்டு ரத்த வகை பிரிக்கிறார்கள். உலகளவில் 35 ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை வகை இருந்தால், அதனைச் சொன்னால் நோயாளிக்கு கூடுதலாக காய்ச்சல் இரண்டு டிகிரி எகிற வாய்ப்பிருக்கிறது. எனவே சுருக்கமாக அ,ஆ போல ஏ,பி,ஓ என்று குறிப்பிடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆன்டிஜென்கள் நம் ரத்தத்தில் உண்டு. அதில் நாம் 35 வகைகளை மட்டுமே ரத்தப்பிரிவாக வரிசைப்படுத்தியுள்ளோம். உங்களது ரத்தப்பிரிவிலுள்ள ஆன்டிஜென், உலகிலுள்ள 99 சதவீத மனிதர்களிடையே இல்லாமல் இருந்தால் நீங்கள்தான் அடுத்த ஸ்பைடர்மேன். ஆம். அரிதினும் அரியவர். ரீனல்(Rhnull ) எனும் ரத்தப்பிரிவு உலகிலேயே அரிதானது. காரணம் இந்த ரத்தப்பிரிவுக்கு ரத்தம் அளிக்க உலகிலேயே ஒன்பது பேர்தான் தயாரா