ரத்தவங்கிகளுக்கு இல்லாத ஒருங்கிணைப்பு - பறிபோகும் உயிர்கள்
pixabay |
பொதுவாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகம். டைகர் பிஸ்கெட் பாக்கெட்டிற்காக அல்ல, உண்மையாக நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதம் தமிழர்களுக்கு உண்டு. இதனால் ரத்ததான முகாம் நடக்கும்போது மக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்கிறார்கள். ஆனால் இந்த ரத்தம் முறைப்படி மக்களுக்கு வழங்கப்படுகிறா?
அனைத்து மருத்துவமனைகளில் ரத்தவங்கி இருக்கின்றன. செயல்படுகின்றன. ஆனால் தேவையானவர்களுக்கு அது பயன்படுவதில்லை. குறிப்பிட்ட ரத்த வகை தேவை எனும்போது நீங்கள் ரத்தம் கொடுத்துவிட்டு அந்த ரத்த வகையை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நாம் தேடும் ரத்த வகை இருக்காது. எனவே பிற மருத்துவமனைகளை நோயாளிகளின் உறவினர்கள் தேடி ஓடுவது நடைபெறுகிறது.
இதற்கு காரணம், மருத்துவமனைகளில் சரியான ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு இல்லாததே காரணம். ரத்தத்தை மாடர்ன் பிரெட் போல ஆறுமாதத்திற்கு அப்படியே வைத்திருந்து பயன்படுத்த முடியாத நடைமுறைப் பிரச்னை வேறு இருக்கிறது. 2016-17 ஆண்டில் மட்டும் 1.9 மில்லியன் யூனிட் ரத்தத்திற்கு தேவை இருக்கிறது. இதனை பற்றாக்குறை என்றும் சொல்லலாம். இதே காலகட்டத்தில் சேமித்து வைத்து ரத்தம் 6 சதவீதம் வீணாகி இருக்கிறது. இதனை ஊக்குவிக்க பணம் தரும் திட்டங்களையும் ரத்த வங்கிகள் முன்னெடுக்கலாம்.
தற்போது இந்தியா முழுக்க அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகள் 3 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவை போதும் என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை முழுமையாக நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சொல்ல வருகிறேன். மத்திய அரசு அங்கீகரித்த ரத்த வங்கிகளின் ரத்த இருப்பை அனைவரும் அறிய இ ரக்த் கோஷ் எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் மக்கள் நூறு சதவீதம் பயன்பெறுகிறார்கள் என்று கூறிவிடமுடியாது. அமெரிக்கா, வியட்நாம் போன்ற நாடுகளில் இந்த வகையில் சிறப்பான பயன் கிடைக்கிறது. அனைத்து ரத்த வங்கிகளையும் முழுமையாக இணைத்துள்ளனர். இதன்மூலம் அரிய ரத்தவகையைக் கூட நாம் எளிதாக கோரிப் பெறமுடியும்.
நடப்பு ஆண்டில் பெருநகரங்களுக்காக மத்திய அரசு ரத்த வங்கிகளை அமைக்க உள்ளன. இந்த வரிசையில் சென்னை, கொல்கத்தா, டில்லி, மும்பை ஆகியவை இடம்பெற உள்ளன. கூடுதலாக உள்ள ரத்தவகையை பிற ரத்த வங்கிகளிடம் பரிமாறிக்கொள்வதற்காக அரசு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான பிரிவில் மாற்றங்களை செய்துள்ளது. இதற்கான கௌன்சில் இதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
இந்தியா இன்னும் தன்னார்வலர்களை நம்பியே ரத்தவங்கிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட பணம் கொடுத்து ரத்ததானத்தை உறுதியான நடைமுறைத் திட்டமாக மாற்றவில்லை. இதன் விளைவாக ஆயிரம் பேருக்கு 8.2 சதவீத ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. இந்த சதவீதம் மூன்று மடங்காக இந்நேரம் பெருகியிருக்க வேண்டும். ஆனால் பெருகவில்லை. இத்தகவலை லான்செட் இதழ் வெளியிட்டுள்ளது.
நன்றி - ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்