அதிர வைக்கும் ரொமான்ஸ் காமெடி - பீஷ்மா படம் எப்படி?
பீஷ்மா - தெலுங்கு
இயக்கம் வெங்கி குடுமுலா
இசை மகதி சாகர்
ஒளிப்பதிவு
ஆஹா...
சலோ என்ற நாக சௌரியா படம் பார்த்திருப்பீர்கள் என்றால் இந்த படத்தை நம்பி பார்க்கலாம். சீரியசான கையில் வைத்திருக்கும் பாப்கார்ன் சிதறும்படி எந்த ஆபத்தும் நடந்துவிடாத கதை.
நிதின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பின்னியிருக்கிறார். வாட் எ பியூட்டி பாட்டில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். நடித்திருக்கிறார். காமெடி செய்திருக்கிறார். இவருக்கு இணையாக படத்தில் நாயகிக்கான இடத்தையும் ராஷ்மிகா செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. நிதினின் அப்பாவாக வரும் நரேஷ், மாமாவான பிரம்மாஜி காம்போ ரசிக்க வைக்கிறது.
ஐயையோ
படத்தில் ஆபத்தான சீரியசான எந்த விஷயமும் நடக்கவில்லை. நாயகனுக்கு ஒரே பிரச்னை. வேலை கிடையாது. காதலி கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் நாம் கவலைப்பட்டு படத்தில் என்ன மாறப்போகிறது, எனவே படத்தை காவிரி ஆறு போல அதன் போக்கிலே போகட்டும் என விட்டுவிடுகிறோம். ஃபீல்டு சயின்ஸ் கம்பெனி இயக்குநரும் வீக்கான வில்லன் என்பதால் எதிர்பார்க்க ஏதுமில்லை.
மகதியின் பின்னணி இசை, பாடல்கள், காமெடி இவை ஒரு படத்திற்கு போதாதா என்று நினைத்தால் படத்தைப் பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்