கோவிட் -19 பாதிப்புக்கு பயப்படத் தேவையில்லை!
நேர்காணல்
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன்
இந்திய அரசு எப்படி மாநில அரசுகளோடு இணைந்து கோவிட் 19 வைரஸ் பாதிப்பை குறைக்க எப்படி முயல்கிறது?
நாங்கள் ஹோலிப்பண்டிகை சமயத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் அரசுகளோடு தொடர்பு கொண்டோம். மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்களையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களோடு கோவிட் 19 சூழல் பற்றி விவாதித்துள்ளோம். மேலும், நோய் தொற்றாமல் இருப்பதற்கான மருந்துகளையும் மாஸ்க்குகளையும் மாநில அரசுகளுக்கு கிடைக்குமாறு செய்துள்ளோம்.
இந்த நோயை எதிர்கொள்ளும்படி இந்தியாவிடம் வசதிகள் உள்ளதா?
புனேவில் உள்ள என்ஐவி ஆய்வகம் வைரஸ்களின் மூலக்கூறுகளை ஆராய்வதில் புகழ்பெற்றது. அதன்மூலம் இந்தியா முழுக்க 52 ஆய்வகங்களை அமைத்து கோவிட் -19 மாதிரிகளை பெறுமாறு செய்துள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட பாராமிலிட்டரி படைகளை அனுமதிக்கும் எண்ணம் உள்ளதா?
பிரதமர் மோடி இதற்கான விஷயங்களை கவனமாக கண்காணித்து வருகிறார். அனைத்து அமைச்சகங்களிலும் இதுபற்றிய விவரங்களைக் கேட்டுள்ளார். நாங்கள் அனைத்து முதல்வர்களுக்கும் இதுபற்றி கடிதங்கள் எழுதியுள்ளோம். சுகாதாரத்துறை செயலாளர்களை இதுபற்றி பேச டில்லிக்கு அழைத்துள்ளோம்.
கோவிட் -19 வைரஸ் நோயாளிகளை கவனிக்க எத்தனை படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன?
இதுவரை 17,500 படுக்கைகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். இனி தேவைப்பட்டால் மாநில அரசுகள் படுக்கை வசதிகளை செய்துகொள்ளலாம்.
சீனாவிலிருந்து மருந்துகள் வந்துகொண்டிருந்தன. இப்போது கொரோனா பிரச்னையால் அந்த மருந்துகளும் தடைபட்டுவிட்டனவே?
சீனாவில் ஹூபெய் தவிர பிற இடங்களிலுள்ள தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிவிட்டன. மேலும் இந்தியா தனக்குத் தேவையான மருந்துகளை முன்னமே சேமித்து வைத்துள்ளது. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை.
நன்றி - டைம்ஸ் - சுஷ்மி டே - மார்ச் 14, 2020