உணவை காசு கொடுத்து வாங்குவதில்லை!



Image result for vir sanghvi



மொழிபெயர்ப்பு நேர்காணல்!


வீர் சாங்கி, உணவு விமர்சகர், எழுத்தாளர்.

உணவுத்துறை எப்படி மாறியுள்ளது?

முதலில் நாங்கள் உணவகம் சென்று உணவை வாங்கிச் சாப்பிடுவோம். அதுபற்றி கருத்துகளை பத்திரிகையில் வலைப்பதிவில் எழுதுவோம். இது உணவகத்தின் வியாபாரம் சார்ந்த விஷயம் என்பதால், எங்களுக்கு உணவகங்களில் உணவு விலையின்றி கிடைக்கும். இன்று உணவகங்கள் குறிப்பிட்ட ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு பணம் தருகின்றனர். அங்குள்ளவர்கள் வந்து உணவைச்சாப்பிட்டுவிட்டு விமர்சிப்பார்கள். அதுதான் நவீன உலகில் மாற்றம் கண்டுள்ளது. இன்று அவர்களுக்கு இன்ப்ளூயன்சர்கள் என்று பெயர். அவர்கள் சமூக வலைத்தளங்களில் உணவு பற்றி பிரசாரம் செய்வார்கள். எழுதுவார்கள். 

உணவு சார்ந்த எழுத்தாளருக்கு என்ன தகுதிகள் தேவை?

உணவு பற்றி எழுதும் எழுத்தாளருக்கு என்ன விஷயங்கள் தேவை என்று நினைக்கிறீர்கள். இன்று உணவுத்துறை சார்ந்து விமர்சனம் செய்து எழுதுபவர்களுக்கு பெரிய மரியாதை இல்லை. காரணம் முன்னர் உணவுபற்றி எழுதுவதற்கு நாளிதழ்களில் இடம் கிடையாது. வலைத்தளங்களில் எழுதுவார்கள். இன்று இன்ஸ்டாகிராம் அந்த இடத்தைப் பிடித்து விட்டது. அதனால், இதில் ஒருவர் எழுதுவதையும் புகைப்படம் பிடித்துப்போடுவதையும் ரசிக்கும் கூட்டம் அதிகமிருந்தால் அவர் சூப்பர்ஸ்டாராகி விடுவார். இந்த பின்பற்றும் கூட்டத்தையும் காசு கொடுத்து வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. எட்டாயிரம் பேர் உங்களை பின்பற்றுகிறார் என்பது உங்களுக்கு பெருமை என்பதை விட உணவுத்துறை சார்ந்த நிறுவனத்திடம் நீங்கள் சிறப்பாக பேரம் பேசி லாபம் பெற முடியும். இதனால் உணவுத்துறை சார்ந்த எழுத்துகளில் நம்பிக்கை குறைந்து வருகிறது.

உங்களுக்கு இணையத்திலுள்ள இன்ப்ளூயன்சர்கள் மூலம் ஆபத்து ஏற்படுவதாக தோன்றுகிறதா?
 
இல்லை. நீங்கள் கூறும் இன்ப்ளூயன்சர்கள் உண்மையில் பெரியளவில் மக்களை ஈர்ப்பதில்லை. உணவகம் பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு இங்கு யாரும் சிறப்பாக இன்ப்ளூயன்சர் பணியைச் செய்வதில்லை. ஏஜென்சிகளுக்காக அவர்கள் உணவகங்களை விளம்பரம் செய்கிறார்கள் அவ்வளவுதான். 

உங்களுக்கு உணவகங்களிலிருந்து விமர்சனங்கள் செய்வதற்காக அழைத்திருக்கிறார்களா?

நான் இந்த அழைப்புகளை ஏற்பதில்லை. இப்படி அழைத்த பிஆர் நிறுவனங்கள் சிலவற்றை போனில் பிளாக் செய்து வைத்துள்ளேன். நிறுவனங்கள் சிலர் தொடங்கும்போது உணவு பற்றி எழுதுபவர்கள், உணவு விமர்சகர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து இலவசமாக அத்தனை ஐட்டங்களையும் சாப்பிடச் சொல்லுவார்கள். சில வாடிக்கையாளர்களுக்கும் இதுபோல அளிப்பதுண்டு. இதெல்லாம் சாம்பிளுக்காக செய்யும் வேலைகள்.


உணவுத்துறை சார்ந்து இயங்குகிறீர்கள். உணவகங்களில் நீங்கள் சாப்பிடும் உணவிற்கு காசு கொடுக்கிறீர்களா?

முதலில் பதிப்பகம், நாளிதழ் சார்ந்து இயங்கும்போது, உணவிற்கு காசு கொடுப்பார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நாம் எதற்கு உணவகம் பற்றி எழுதவேண்டும். அவர்கள் அதற்கு ஏதாவது பணம் தரவேண்டுமென நினைக்கிறார்கள். இலவசமாக எதற்கு உணவகம் பற்றி எழுதவேண்டுமென நினைக்கத்தொடங்கியுள்ளனர். இன்று உணவகங்களில் உணவுக்குப் பணம் கொடுத்து சாப்பிடும் பழக்கம் கிடையாது. 

நன்றி – அவுட்லுக்.