இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வது? மத்திய அரசு தடுமாற்றம்







Image result for corona cartoon
டெம்போ மேகசின்




விதிகள் இயற்றப்படாத அபாயம்!

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது மூன்று பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கு எந்த கொள்கைகளும் அரசிடம் இல்லை. தற்போது எய்ம்ஸ் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 


கொரோனாவில் இறந்தவர்களை பிளாஸ்டிக் பேக்கால் மூடிவிடவேண்டும். அவர்களின் உடலிலுள்ள நீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இறந்த உடல்களை எரிக்கவேண்டும். புதைக்க கூடாது.
இச்செயல்களை செய்பவர்கள் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது முக்கியம். 


உலகம் முழுக்க ஆறாயிரம் பேர் கொரோனாவால் இறந்துபோயுள்ளனர். இதில் இந்தியாவில் மூன்று பேர் என்று சந்தோஷப்பட முடியாது. காரணம், மக்கள்தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் சீனா அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது. முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம். மத்திய அரசு இதனை தாமதமாக புரிந்துகொண்டாலும் இதற்கான விதிமுறைகளை அமைக்க குழுவை அமைத்துள்ளது. 


டில்லி மேற்குப்பகுதியிலுள்ள ஜானக்புரியைச் சேர்ந்த பெண்மணி கொரோனாவுக்கு பலியானார். ஆனால் அவரது உடலை உடனே தகனம் செய்யாமல் அரசு அமைப்புகள் தாமதம் செய்துள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கொள்ளைநோய் தன்மையுள்ள நோய் உள்ளவர்களை உடனே தகனம் செய்ய அனுமதி தராமல் மருத்துவம் பார்த்த மருத்துவமனை, தகனம் செய்யும் இடம், கார்ப்பரேஷன் அலுவலகம் இழுத்தடித்துள்ளன. இதற்கு காரணம் மத்திய அரசு இதற்கான முழுமையான விதிமுறைகளை வகுத்து வெளியிடாததுதான். இறந்த உடல்களை கையாளுவதில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு என ஆரோக்கிய வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இத்தாலியில் மட்டுமே 1800 பேர் இறந்துள்ள நிலையில் அதனை பரிசோதித்துக்கொண்டு இருக்க முடியாதுதானே?
காரணம், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா பயத்தால் முடங்கியபோது இந்தியாவில் இயல்பு வாழ்க்கை எப்போதும் போல நடந்துகொண்டிருந்தது.


 தமிழ்நாட்டில் அரசு தூங்கிக் கொண்டு இருந்ததால் தி.நகரில் கோடைக்கொண்டாட்ட துணிமணிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இந்த அலட்சியத்தை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க முடியாது. காரணம் இது இந்தியா. யோகா செய்தால் கொரோனா பாதிப்பு நேராது என மாநிலத்தை ஆளும் முதல்வர் கித்தாய்ப்பாக சொல்ல முடிகிறது. இதில் அந்த புத்திசாலியைத் தேர்ந்தெடுத்த மக்கள் எப்படி இருப்பார்கள்? கவனத்துடன் மக்கள் இருந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டெழ முடியும். 

நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ் - சௌம்யா பிள்ளை, ஸ்வேதா கோஸ்வாமி
 2