சிறந்த வணிகம் எது?




Banana, Requirements, Fairtrade, Stone, Fruit, Fruits
pixabay


உலகம் முழுக்க நடைபெறும் வியாபாரம் பலதரப்பட்டது. முன்னர் பத்திரிகையாளர் சாய்நாத் தனது நூலில் எழுதியுள்ளது போல இடைத்தரகர்கள் விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடினர். இதனால் பல விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை கிடைக்காமல் தடுமாறினர். இதனைக் கண்ட அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். இதனை இன்று இணைய நிறுவனங்கள் மாற்றியுள்ளன. வணிக நடைமுறையில் ஃபேர் ட்ரேட் நடைமுறை முக்கியமானது. இதில் குறிப்பிட்ட விவசாய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பொருட்களை அளித்து விவசாயத்திற்கு உதவுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயியும், நிறுவனமும் பகிர்ந்துகொள்கின்றன. இதில் இடைத்தரகர்களின் பங்கு குறைவு. ஆனால் ஃபேர் ட்ரேட் எனும் வியாபாரத்திற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே இவ்வணிகத்தை செய்ய முடியும்.

இதற்கு மாற்று இல்லாமல் இல்லை. சந்தையில் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு நேரடியாக பொருட்களை விற்கிறார்கள் அல்லவா? அதுதான்.

ஃபேர் ட்ரேட் நடைமுறை உலகளவில் வெற்றி பெறுவதற்கான காரணம், இதன் வலைப்பின்னல் அமைப்புதான்.

1. விவசாயிகளுக்கு தேவையான விளைபொருட்கள், உரங்கள் என உதவிகள் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

2. கிடைக்கும் லாபம் விவசாயிகளோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

3.பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கை குறைவு.

4. விளைபொருட்கள் நகரங்களிலுள்ள பெரிய சிறப்பங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

5.வாழைப்பழங்கள் போன்றவை சிறப்பங்காடிகள் விற்பதற்கு அவை கெடாமல் இருக்கவேண்டும். இதற்காக 14 டிகிரி செல்சியசில் அவை பாதுகாக்கப்படுகின்றன.

6. இந்த வணிகத்தில் உள்ள சிக்கல், வாடிக்கையாளர்கள் இப்பொருட்களை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்கிற அழுத்தம்தான். சிறப்பங்காடிகள் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு பொருட்களை கமிஷன் பெற்று விற்பதால் அனைத்து நிறுவனங்களின் பொருட்களும் இங்கு கிடைப்பதில்லை.

சிறப்பங்காடிகளுக்கு அதிக கமிஷன் ஃபேர் ட்ரேட் மூலம் கிடைக்கிறது. எனவே அவர்கள் பெரும்பாலும் பெரும் நிறுவனங்களின் காய்கறிகளை விற்கவே இசைகின்றனர். இதனால் உணவு சார்ந்த வணிகம் ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒருவரின் கையிலேயே இருக்கிறது. இது சந்தையை அபாயகர தன்மைக்கு கொண்டு செல்கிறது.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்



பிரபலமான இடுகைகள்