ஒரு கப் தேநீரில் என்ன இருக்கிறது என தெரியுமா?

 Tee, Teacup, Tea Bags, Cup, Drink, Hot Drink, Tea Time






உலகம் முழுக்க பல கோடி மக்களால் பருகப்படும் பானம் தேநீர். பிரிட்டிஷார் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பணப்பயிர், இன்றளவும் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. பொதுவாக மக்கள் டஸ்ட் டீயை குடித்து வந்தாலும், இதில் ஆறு வகைகள் உள்ளன.

கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊலாங், பு RCH  என ஆறு வகைகள் இன்று சந்தையில் உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசு கடைகளான டேட்டீ கிளைகளில் பல்வேறு வகை டீ வகைகள் கிடைக்கின்றன.



காபியை விட டீயில் காஃபீன் அளவு அதிகம். ஆனால் தேயிலையை தூளாக மாற்றும் பல்வேறு படிநிலைகளில் காஃபீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு கப் டீயில் 50 மி.கி. காஃபீன் உள்ளது. அதேயளவு காபியில் 175 மி.கி. காஃபீன் உள்ளது. காரணம் தேயிலைக்கும், காபி கொட்டைகளுக்கும் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் டீயை விட்டுத்தர முடிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் காபியை பலரும் விட்டுத்தர முடியாமல் அடிமையாக மாறக் காரணம் அதிலுள்ள காஃபீன்தான்.


இன்று டீயிலும் கூட பல்வேறு கலப்படங்கள் வந்துவிட்டன. டீ, காபி இயல்பாகவே உடலை ஊக்கமூட்டும் தன்மை கொண்டது. அதில் பெரியளவு உடல்நலனுக்கான தன்மைகளை ஆரோக்கி அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதிலும் சில மூலிகைப் பொருட்களை, தாவரங்களைக் கிள்ளிப்போட்டு அதையும் யூனிலீவர், டாடா போன்றோர் காசு செய்கிறார்கள். இதனால் மக்களின் ஆரோக்கியம் வலுவானதா என்று தெரியவில்லை. டாடாவின் டீ வேதா, ப்ரூக் பாண்டில் நேச்சர் கேர் இந்த வகையில் நன்றாக விற்கிறது. பற்பசையில் பிரியாணி மசாலாக்களை கலந்து கோல்கேட் விற்று காசு பார்ப்பது போல இதுவும் முக்கியமான வியாபாரமாகி வருகிறது.


உலகளவில் நாம் பயன்படுத்தும் தேயிலையில் 38 சதவீதம் சீனாவிலிருந்து பெறப்படுகிறது. இதன் பொருள், தேயிலை உற்பத்தியில் சீனா சாதனை செய்து வருகிறது என்பதுதான்.ஒரு  கோப்பை தேநீரில் என்ன இருக்கிறது என யோசித்திருக்கிறீர்களா?

காஃபீன், தியானைன், ஃபிளேவ்னாய்ட்ஸ், சபோனைன், வைட்டமின், மினரல் ஆகியவை உள்ளன. சிறந்த டீக்கு அதனை எப்படி தயாரிக்கிறோம் என்பது முக்கியம். நீங்கள் ப்ரூக் பாண்ட் த்ரீரோசஸ் வாங்கினால் சிறப்பான டீ ரெடியாகிவிடும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. உங்கள் பகுதி நீரில் டீயை தயாரிக்க வேண்டும். அதன் பிஹெச் அளவு 5 க்குள் இருக்கவேண்டும்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

படம் - பிக்ஸாபே