தற்காப்புக்கலையை கற்கும் தறுதலை நாயகனின் கதை! - அரஹான்



Arahan (2004) in 214434's movie collection » CLZ Cloud for Movies ...



அரஹான் 2004

இயக்கம்  ரியூ சியுங் வான்



ட்ராஃபிக் போலீஸாக நேர்மையாக பணி செய்து வருபவர், சாங் வான்.ஒருநாள் திருடன் ஒருவரின் பர்சைத் திருடிக்கொண்டு பைக்கில் பறக்கிறான். அதை தடுக்கும் முயற்சியில் பெண்ணிடம் கடுமையாக அடிபடுகிறார். அவரை அப்பெண் தன் தந்தை உள்ளிட்ட ஐந்து குருமார்களிடம் கொண்டு சென்று குணமாக்குகிறாள். அப்போது அவர்களுக்கு சாங் வான் உடல் தற்காப்புக் கலைக்கான ஏற்றது என தெரிய வருகிறது. எனவே அவர்கள் தாவோ தற்காப்புக்கலையை விலையின்றி கற்றுக்கொடுக்க முன்வருகிறார்கள். சாங் வான், பெண்களை வெறியோடு கவனித்துக்கொண்டு அலைபவன். அவனால் மனதைக் கட்டுப்படுத்தி தாவோ கலையைக் கற்க முடிந்ததா? ஐந்து குருமார்களையும் கொல்ல துரத்தும் வில்லனை வெல்ல முடிந்ததா? தொன்மையான தாவோ முத்திரையை பாதுகாக்க முடிந்ததா என்பதுதான் கதை.

படத்தின் கதை பற்றி இயக்குநர் ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை. கதை அதுபாட்டுக்கு கிடக்கட்டும் என காமெடியில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். இதனால் தற்காப்புக் கலை பற்றிய  விஷயம் டேக் இட் ஈஸியாக கையாளப்பட்டிருக்கிறது.

நாயகன் ஏறத்தாழ பார்க்கும் பெண்களை உள்ளாடை வரை நோட்டமிட்டு பிரமிப்பவர். அவர் மனதை ஒருமுகப்படுத்தி சண்டை போடுவது கிளைமேக்சில் மட்டுமே நடக்கிறது. உயர்ந்தநிலையை அடைவது அறிவிலும் மனதிலும் ஆசை இல்லாத நிலையில்தான் சாத்தியம் எனும் நிலையில் நாயகனுக்கும் , நாயகிக்கும் எப்படி உடலில் அதனை ஏற்ற முடியும்? இருவரின் மனதிலும் தன்னை நிரூபிக்கும் ஆசை உள்ள நிலையில் எப்படி முத்திரை அவர்களின் உடலில் நிலையாக இருக்கும் என்று புரியவில்லை.

எதையும் ஜாலியாக பார்க்க நினைப்பவர்களுக்கான படம். தற்காப்புக் கலை அதன் முக்கியத்துவம் என்பது இப்படத்தில் ஊறுகாயாகவே பயன்பட்டிருக்கிறது.

கோமாளிமேடை டீம்