சுற்றுலா பயணிகள் நீலகிரி மலைப்பகுதியை புரிந்துகொள்வது அவசியம்!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜே.இன்னோசென்ட் திவ்யா
குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்த மக்கள் அதிகம் இடம்பெயர்ந்து வருகிறார்களே?
வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தேடி இங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதன் விளைவாக பல்வேறு பழங்குடி மக்களின் எண்ணிக்கை இங்கு குறைந்து வருகிறது. இங்கு வாழ்வதற்கான வளங்களும் வாய்ப்புகளும் குறைவாக இருக்கிறபோது எப்படி மக்களை வேறிடம் நோக்கி செல்லாதீர்கள் என்று கூற முடியும்?
பிளாஸ்டிக் தடை இங்கு கடைபிடிக்கப்படுகிறதா?
2018ஆம் ஆண்டு நாங்கள் பத்தொன்பது பொருட்களை தடை செய்தோம். பின்னர் கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவுப்படி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளோம். அரசு கூறியது மட்டுமன்றி, ஐந்து கூடுதல் பொருட்களையும் இங்குள்ள மலைப்பகுதி சார்ந்து பயன்படுத்த தடை விதித்துள்ளோம். காரணம், இந்த மாவட்டம் சிறப்பு அந்தஸ்து பெற்ற பகுதியாகும்.
ஆழ்குழாய் கிணறு அமைக்கும் செயல்பாடுகளை குறைந்துள்ளதே எப்படி?
இங்கு பத்து முதல் பன்னிரெண்டு அடியிலேயே குடிநீர் கிடைக்கும். அப்போது எதற்கு ஆழ்குழாய் கிணறு? அப்படி அமைக்கும்போது அது கீழேயுள்ள வலுவான பாறைகளை சேதப்படுத்துகிறது. 2017ஆம் ஆண்டு நாங்கள் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு தடை விதித்தோம். அதற்கு முன்னர் இங்கு ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு காரணமாக ஆழ்குழாய் கிணறுதான் இருந்தது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?
பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இரண்டையும் சரியாக பராமரிக்க நாங்கள் முயன்று வருகிறோம். எங்களது மாவட்டத்தின் வசதிகள் அடிப்படையானவை. அதனால் சுற்றுலா பயணிகளை வரவேற்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இங்கு குறிப்பிட்ட வனப்பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்று கூறியிருக்கிறோம். அங்கு சென்று குப்பைகளை போடுவது இங்கு வாழும் மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் மலைவாழ் தலத்தை புரிந்துகொண்டு இங்கு வரவேண்டும் என நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.
நன்றி - டைம்ஸ், சாந்தா தியாகராஜன்