பராக் ஒபாமா விரும்பி படித்த நூல்கள் இவைதான்!
பராக் ஒபாமா விரும்பிய புத்தகங்கள்!
தகவல் யுகத்தில் மனிதர்கள் எப்படி பொருட்களாக மாறுகிறார்கள். அவர்களை எப்படி கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை ஆசிரியர் சோசனா கூறியுள்ளார்.
இந்தியா முழுக்க பல்வேறு வணிக குழுக்கள் வியாபாரம் செய்தன. அதற்காக பல்வேறு நாடுகளை காலனியாக்கி ஆட்சி செய்தன. அது பற்றிய வரலாற்றை ஆசிரியர் கூறுகிறார். மொகலாயர் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனி வரையில் இந்த வரலாறு நீள்கிறது.
1890 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான செவ்விந்தியர்களின் வாழ்க்கை பதிவாகி உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை த் தாக்குதல்களை நூல் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஆண்ட்ரேவின் சுயசரிதை. இதில் அவரின் வாழ்க்கை, விளையாட்டில் ஈடுபட்ட அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்.
நன்றி - எகனாமிக் டைம்ஸ்