குற்றவாளியும், நல்லவனும் ஒரே உருவத்தில்! - முடிஞ்சா இவனப் புடி!
முடிஞ்சா இவனப்புடி
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்
கதை: டி.சிவக்குமார்
ஒளிப்பதிவு ராஜரத்தினம்
இசை: இமான்
கதை: சத்யம் நேர் வகிடு
எடுத்து சீவிய நல்ல மனிதர். இவருக்கு எதிராக ஜெல் போட்டு வாரிய தலை, தொப்பி சகிதமாக
ஊர்ப் பெருசுகளின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சாமர்த்தியசாலி சிவம். இருவரும் ஒருவரா,
வேறு வேறா என்று காவல்துறை ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடிப்பதுதான் கதை.
ஆஹா
கிச்சா சுதீப் நன்றாக நடித்திருக்கிறார்.
என்ன அவர் பேச்சில்தான் தடுமாற்றமாக இருக்கிறது. தன்னுடைய குரலில் பேசுகிறாரா அல்லது
ரஜினி போல மிமிக்ரி ஏதாவது செய்கிறாரா என்று கண்டுபிடிப்பதிலேயே படம் பாதி போய்விடுகிறது.
நித்யா மேனன் இந்த படத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார். பிரகாஷ்ராஜின் போர்ஷன்
சிறியதுதான் என்றால் கவனிக்க வைக்கிறார்.
ஐயையோ
இதுபோல பணத்தைக் கொள்ளையடிக்கும்
படம் என்றால், எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கொஞ்சமேனும் டீட்டெய்லாக சொல்லுவார்கள்.
இதில் படம் தொடங்கும்போது நடக்கும் கொள்ளையைத் தவிர்த்து வேறெங்கும் சிவத்தின் புத்திசாலித்தனத்திற்கு
எந்த சாட்சியும் இல்லை. மேலும் கதை, இருவருமே ஒருவரா என்று போலீஸ் ஸ்டேஷனில் சத்யத்தை
அடித்து விடுதலை செய்யும்போதே தெரிந்துவிடுகிறது. இதனால் படத்தில் பெரிய சுவாரசிய விஷயங்கள்
ஏதுமில்லை. ஒரு மணிநேரத்தில் சொல்லவேண்டிய கதையை இரண்டரை மணிநேரத்திற்கு டி. இமானின்
பாடல்கள், ஹீரோவின் பில்டப் தீம் மியூசிக்கை வைத்து இழுக்கிறார்கள்.
மாபெரும் மைனசாக காட்சி
கிளைமேக்ஸ், சிவத்தின் கதாபாத்திரத்தை கொல்வதாக காட்சி. அது முதலிலயே டம்பி டிராமா
என்பது தெரிந்துவிடுகிறது. அதற்கும் மேலான காட்சிகள் அய்யோ ராமா விட்ருடா சாமி என்று
சொல்ல வைக்கிறது.
விரும்பினால் படம் பாருங்கள்.
சமரசங்கள் சால செய்துபொறுத்தால் மட்டுமே இவனைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
கோமாளிமேடை டீம்