பன்மை கலாசாரத்தை விரும்பும் இந்தியன் நான்! - சத்யா நாதெள்ளா




Image result for satya nadella black and white
infinityleap






சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட் இயக்குநர்

இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைத் தாண்டி, புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாதித்த சாதனைகள் அதிகம். மைக்ரோசாப்டின் குறைகளை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அந்நிறுவனப் பிரிவுகளை ஒருங்கிணைத்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சத்யா. அவரிடம் டெக் துறை, வளர்ச்சி, இந்தியா பற்றி பேசினோம்.

செயற்கை நுண்ணறிவு பற்றி நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள். அதாவது, அத்துறைக்கான விதிகளை வகுக்குமாறு பேசியிருந்தீர்கள். டெக் நிறுவனங்கள் பயனர்களின் பிரைவசி விஷயங்களை சரியாக கடைபிடிக்கின்றனவா?

தொழில்நுட்பம் என்பது ஒரேமாதிரிதான். ஆனால் அதனை கடைப்பிடிக்க சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன. உணவுபாதுகாப்புத் துறைக்கு விதிகள் இருப்பது போலவே, விமானத்துறைக்கும் விதிகள் உண்டு. அதேபோல செயற்கை நுண்ணறிவு துறைக்கும் தனியான விதிகள் இயற்றப்படவேண்டும்.

பயனரின் அந்தரங்கம் என்பது அவரின் உரிமை. அது பாதுகாக்கப்படவேண்டும். நாங்கள் ஐரோப்பாவின் விதிமுறைகளை உலகம் முழுக்க பின்பற்றுகிறோம். கடுமையான விதிமுறைகளை விதித்தால் அவை டெக் நிறுவனங்களுக்கு கடுமையான செலவை வைக்கும். இதன் விளைவாக அவர்கள் மக்களுக்கு அளிக்கும் சேவையின் விலையை கூட்டவேண்டி இருக்கும். வணிகத்தைக் காப்பாற்ற வேறு வழியே கிடையாது.


சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பங்கள் அதிகரிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இந்தியா அதுபோன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்தி உலகிற்கு வழங்கவேண்டும் என்று கூறவருகிறீர்களா?

நுகர்வோருக்கான பொருட்களைச் செய்வது தப்பில்லை. ஆனால் அதனை விரிவாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். முதுகெலும்பு காயமுற்றவர்களுக்கு எக்சோகெலிட்டன் போன்ற சாதனங்களை வட அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கின்றனர். நான் இதுபோன்ற தொழில்நுட்பங்களை இந்தியர்கள் உருவாக்கி இருக்கி சாதனைகள் செய்ய வேண்டும் என்ற நினைக்கிறேன். புதிய கண்டுபிடிப்புகளை அவர்களாகவே உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எனகிருக்கறது.

ஜனநாயக கட்சி கட்சி வேட்பாளர்கள் நேரடியாகவே டெக் நிறுவனங்களை முடக்கவேண்டும் என்று கூறியுள்ளதே? குறிப்பாக மக்கள் அதிகம் இணைந்திருக்கும் பேஸ்புக்குக்கு இதுபோன்ற எதிர்ப்பு அதிகம் வருகிறது.

மக்களுடைய தேவைகளை நாங்கள் குறிப்பிட்ட கட்டணத்தில் அவர்களுக்கு திருப்தியாவது முக்கியம். இப்படித்தான் டெக் நிறுவனங்கள் வளர்ந்தன. அந்தந்த நாட்டில் அரசுகளின் விதிமுறைகளின்படியே டிஜிட்டல் பக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன. வெறுமனே குற்றச்சாட்டு இல்லாமல் தவறுகளை எதிர்தரப்பு நிருபீப்பது முக்கியம்.

குடியுரிமைச் சட்டம் பற்றி நீங்கள் கூறிய கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

ஒவ்வொரு நாட்டிற்கும் கொள்கைகள் வகுப்பது பற்றிய உரிமை, அதிகாரம் உள்ளது. நாட்டிற்கான அகதிகள கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பது முக்கியமானது. இதுபற்றிய கொள்கைகளை அரசு மக்களின் ஒப்புதல் பெற்று அமலாக்க வேண்டும். நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன். அதன் பல்வேறு பன்மை இனக்குழு கலாசாரங்களின் மதிப்புகளை அறிந்தவன். எனவே இந்தியாவின் தன்மை, கலாசாரம் மாறிவிடக்கூடாது என்று பேசினேன். அதுவே உண்மை. இந்தியாவில் பிறந்துவளர்ந்தவர்கள், அதனை நேசிப்பவர்கள் வேறு எப்படி பேச முடியும்?

முகேஷ் அம்பானி உங்கள் நிறுவனம் பற்றியும், வணிகத் தொடர்பு பற்றியும் அதிகம் ஈடுபாடு காட்டுகிறாரே?

முகேஷ் அம்பானி எங்களது நிறுவனத்தில் க்ளவுட் தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ளவும் அதனை எப்படி பயன்படுத்துவது என்றும் அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு பயன்படும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை மைக்ரோசாப்ட் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. விரைவில் நாங்கள் அவர்களின் நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை அளிக்கவிருக்கிறோம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கலாசாரத்தை மாற்றி இருக்கிறீர்களே?

நீங்கள் தினசரி காலையில் எழும்போது உங்கள் மனநிலை ஒன்றுபோலவே இருப்பதில்லை. பல்வேறு சம்பவங்கள் உங்கள் மனநிலையில் தாக்கம் செலுத்தும். நிறுவனமும் அப்படித்தான். நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிய நோக்கம் தெளிவாக இருந்தால், குழுவை திட்டமிட்டு அதை நோக்கி செலுத்த முடியும். தனிநபர்களுக்கு என்ன விதியோ அதைத்தான் அப்படியே நிறுவனங்களுக்கும் மாற்றுகிறோம். கலாசாரம் என்பது காலத்திற்கேற்ப மாறுவது அப்படியே வைத்துக்கொள்ள முடியாது.

நன்றி - எகனாமிக் டைம்ஸ்

பிரபலமான இடுகைகள்